tamilnadu

img

கேரளாவில் புதிய கிட் கண்டுபிடிப்பு....  10 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை

திருவனந்தபுரம்
கொரோனா  வைரஸ் தொற்றை கண்டுபிடிப்பதற்கான கிட்டையும் உபகரணங்களையும் ஸ்ரீசித்ரா இன்ஸ்டிட்யூட் கண்டுபிடித்துள்ளது. ‘சித்ரா ஜீன் லேப் என்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கிட் மூலம் பத்தே நிமிடத்தில் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான செலவில் நோய் தொற்றை கண்டுபிடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தற்போது பயன்பாட்டில் உள்ள ஆர்டிபிசிஆர் இயந்திரத்தைவிட  ‘சித்ரா ஜீன் லேப் என்’  வேகமாகவும் துல்லியமாகவும் முடிவுகளை அறிய முடியும் என மூலக்கூறு மருத்துவ விஞ்ஞானியும் பொறுப்பு அதிகாரியுமான டாக்டர் அனூப் தெரிவித்துள்ளார். ஆர்டிபிசிஆரில் இரண்டு முறை ஆய்வு நடத்தி கொரோனா உறுதி செய்யப்படும். சித்ரா ஜீன் லேப் என் மூலம் முதலாவது கட்டத்திலேயே பத்து நிமிடங்களில் முடிவை தெரிந்து கொள்ளலாம். மாதிரிகள் சேகரிப்பு உட்பட மொத்தம் இரண்டு மணி நேரம் போதுமானது. ஒரு தொகுப்பில் 30 மாதிரிகளை ஆய்வு செய்யலாம். மாவட்ட மருத்துவமனைகளின் ஆய்வகங்களில்கூட ரூ.2.5 லட்சம் செலவில் ஆய்வுக்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். ப்ளோரசன்ஸில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் இயந்திரத்திலிருந்தே ஆய்வு முடிவை தெரிந்துகொள்ளலாம். ஒரு டெஸ்ட்டுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே செலவாகும்.  

ஆலப்புழயில் உள்ள என்ஐவி ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ‘சித்ரா ஜீன் லேப் என்’ நூறு சதவிகிதம் துல்லியமானது என்பது தெரியவந்துள்ளது. தொழில்முறை அடிப்படையில் உற்பத்தி செய்வதற்காக இந்த தொழில்நுட்பம் அகப்பே டயக்னாஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஐசிஎம்ஆரின் அனுமதி மற்றும் சிடிஎஸ்சிஓ உரிமம் கிடைத்ததும், உற்பத்தி தொடங்கும். டாக்டர். அனூப் தலைமையிலான குழு மூன்று வாரங்களில் சித்ரா ஜீன் லேப் என்’ இயந்திரத்தை உருவாக்கியுள்ளது.
 

;