tamilnadu

img

கேரள சட்டமன்றத்தில் 5 புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

திருவனந்தபுரம், அக்.28- கேரள சட்டமன்றத்தில் புதிதாக தேர்வு செய்ய ப்பட்ட 5 உறுப்பினர்கள் திங்க ளன்று பதவியேற்றனர். கேரள சட்டமன்றத்தில் காலியாக இருந்த 5 இட ங்களுக்கு இம்மாதம் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடை பெற்றது. இதில் வட்டியூ ர்காவு, கோந்நி ஆகிய தொகு திகளில் எல்டிஎப் சார்பில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர்கள் வி.கே.பிரசா ந்தும், யு.கே.ஜினீஷ் குமாரும் வெற்றி பெற்றனர். அரூர், எர்ணாகுளம் தொகு திகளில் யுடிஎப் சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ஷானிமோள் உஸ்மானும், ஜே.வி னோத்தும், மஞ்சேஸ்வ ரத்தில் யுடிஎப் வேட்பாள ரான முஸ்லீம் லீக்கின் எம்.சி.கம்ருதீனும் வெற்றி பெற்ற னர். திங்களன்று துவங்கிய சட்டமன்ற கூட்டத் தொடரில் கேள்வி நேரம் முடிந்ததும் இவர்கள் ஐவரும் பதவி ஏற்றனர். கடந்த மாதம் நடந்த பாலா சட்டமன்ற தொ குதி இடைத்தேர்தலில் எல்டிஎப் சார்பில் போட்டி யிட்ட சிபிஎம்மின் மாணி சி கா ப்பன் வெற்றி பெற்றார். அவர்  ஏற்கனவே பதிவி ஏற்றார். எனி னும் அவர் பங்கேற்கும் முதல் சட்டமன்ற கூட்டம் இது வாகும். 14ஆவது கேரள சட்ட மன்றத்தில் 91 உறுப்பின ர்களைக் கொண்டிருந்த எல்டிஎப்பின் எண்ணிக்கை தற்போது 93 ஆக உயர்ந்து ள்ளது. யுடிஎப்பின் உறுப்பி னர் பலம் 47லிருந்து 45 ஆக  குறைந்துள்ளது.

;