tamilnadu

கேரளாவில் தொடரும் கனமழை எச்சரிக்கை

திருவனந்தபுரம், ஆக.9- கேரளத்தின் மத்திய மற்றும் தெற்கு மாவட்டங்க ளில் பலத்த மழை தொடர்கிறது. இடுக்கி மாவட்டம் இன்னும் சிவப்பு எச்சரிக்கையில் உள்ளது. ஆனால் ஞாயிறன்று காலை மழை சற்று குறைந்தது. முல்லைபெரியார் அணை நீர்மட்டம் உயரும் நிலை யில் பெரியாற்றின் கரையில் வசிக்கும் மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மலைப்பாங்கான பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கை யுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது. கடல் சீற்றம் அதி கமாக உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லக் கூடாது. ஆலப்புழாவில் மழை சற்று குறைந்து விட்டா லும், கிழக்கிலிருந்து வரும் நீரால் குட்டநாட்டில் நீர்மட்டம் கடுமையாக உயர்ந்து வருகிறது. பதனம் திட்டாவிலும் பலத்த மழை தொடர்கிறது. பம்பா அணையின் நீர்வரத்து அதிகமாக உள்ள தால் மதகுகள் திறந்து தண்ணீர் வெளியேற்றப்படும். அதற்கு முந்தைய இரண்டாம் கட்டமான ஆரஞ்ச் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய கேர ளத்தின் முக்கிய நதிகளான பம்பா, அச்சன்கோவில், மீனச்சில், மணிமலா போன்றவை அனைத்தும் கரை நிரம்பி பாய்கின்றன. பதானம்திட்டா மற்றும் கோட்ட யத்தில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. நீர்மட்டம் உயர்ந்ததால், குட்டநாட்டில் கூடுதல் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டன.

;