tamilnadu

img

சரித்திடமிருந்து தங்கம் வருவது சந்தீப் நாயரிடம்... பாஜக தலைவர்களிடம் நெருங்கிய தொடர்பு அம்பலம்...

திருவனந்தபுரம்:
தங்க கடத்தல் வழக்கின் முக்கிய புள்ளியாக சுங்கத்துறையினர் கண்டறிந்துள்ள சந்தீப் நாயர்ஆடம்பர வாழ்க்கைக்கு மாறியது குறுகிய காலத்தில். திருவனந்தபுரம் சாலை பகுதியில்வசிக்கும் பாஜக தலைவரின் ஓட்டுநராக இருந்தசந்தீப் பின்னர் சொந்த தொழில் நடத்தும் அளவுக்கு வளர்ந்தார். அவ்வப்போது வெளிநாடு களுக்கு பயணமும், நட்சத்திர விடுதி வாசமும்வாழ்க்கையின் பகுதியாக மாறியது. பாஜக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள இவர்கள் 3 முறை கடத்திய தங்கத்தின் மதிப்பு ரூ.60 கோடி மதிப்புடவை என தெரியவந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சொந்தமாக கார்பன்டாக்டர் ஒர்க் ஷாப் என்கிற நிறுவனத்தை தொடங்கினார். சந்தீபுக்கு திரைப்பட உலகின் முக்கிய பிரமுகர்களிடமும் தொடர்புள்ளது. கார்களின் மீது மோகம் கொண்ட இவரிடம் மகாராஷ்டிரா, தமிழ்நாடு பதிவு எண்கள் கொண்ட இரண்டு கார்கள் உள்ளன. யுஏஇ தூதரகத்திற்கு சென்றபோது இவருடன் சொப்னாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து அரசுமுறை யிலான பாதுகாப்புடன் தங்கம் கடத்த களம் அமைத்தனர். சரித்திற்கு தூதரகத்துடன் உள்ள உறவை சாமர்த்தியமாக பயன்படுத்தி விமான நிலையத்திலிருந்து கடத்தல் சரக்குப் பெட்டிகளை பெற்றுவந்துள்ளார். 

அரசு முறையிலான பாதுகாப்புடன் மூன்று முறை கடத்தியது ரூ.60 கோடி மதிப்பிலான தங்கம். கடத்தலின் முக்கிய சூத்ரதாரிகள் சொப்னாவும் சந்தீபும் என சுங்கத்துறையிடம் சரித் வாக்குமூலம் அளித்துள்ளார்.  கடந்த ஆண்டு 12 முறை இதுபோன்று தங்கம் கடத்தியதாகவும் சரித் தெரிவித்துள்ளார். தங்கம் கொடுவள்ளியில் கொடுத்து பணம் பெற்றுக் கொண்டு அதை அடுத்த கடத்தலுக்கு பயன்படுத்துவது வழக்கம். விமான நிலையத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் பெட்டி மணக்காடு யுஏஇ தூதரகம்ஏற்கனவே நிச்சயித்த மையத்தில் தானே ஒப்படைப்பதாகவும், ஒப்படைக்க வேண்டிய இடத்தை சொப்னா தெரிவிப்பார் என்றும் அந்த மையத்தில் வைத்து சந்தீப் நாயரிடம் தங்கம் ஒப்படைக்கப்படும் என விசாரணையில் சரித் தெரிவித்துள்ளார். பிடிபட்ட கள்ளக்கடத்தல் தங்கத்தை விடுவிக்க பாஜகவின் தொழிற்சங்க பிரிவான பிஎம்எஸ் தலைவர் ஹரிராஜ் சுங்கத்துறையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக தலைதப்பவே முதல்வர் அலுவலகத் தொடர்பு உள்ளதாக பொய் பிரச்சாரத்தை கேரள பாஜக தலைவர் கே.சுதாகரன் தொடங்கியதாக கருதப்படுகிறது. 

சிபிஎம் ஊழியரை தாக்கியவர் சந்தீப் 
தங்க கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்டு சுங்கத்துறையால் தேடப்படும் சந்தீப் நாயர் நெடுமங்காடு பகுதியில் சிபிஎம், டிஒய்எப்ஐ ஊழியர்களுக்கு எதிராக நடந்த தாக்குதலில் குற்றவாளியாவார். கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது நெடுமங்காடு மூக்கோலியில் டிஒய்எப்ஐ ஊழியரை தாக்கியது சந்தீப் நாயர் உள்ளிட்ட கும்பலாகும். பாஜக மாநில பொதுச் செயலாளரான கே.ஏ.பாகுலேயனின் வலதுகரமாக நெடுமங்காடு பகுதி மக்களால் அறியப்பட்டவர் சந்தீப் நாயர். ஆனால் இவரை சிபிஎம் உறுப்பினராக சித்தரித்து ஏசியாநெட் தொலைக்காட்சி பொய் பிரச்சாரம் மேற்கொண்டது. சந்தீப்பின் தாயார் உஷா தன்னை சிபிஎம் ஆதரவாளர் என தெரிவித்ததை ஒலிமறைவு செய்து ஏசியாநெட் பரபரப்பு ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அந்த ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது.  சந்தீப் நாயர் பாஜகவின் உயர்மட்ட தலைவர்களுடன் நெருங்கிய தொர்பில் உள்ளவர். பாஜக திருவனந்தபுரம் மண்டல தலைவரும் மாநகராட்சி கவுன்சிலருமான எஸ்.கே.பி.ரமேஷிடம்  வேலை செய்தவர் சந்தீப். ‘ஆல்வேய்ஸ் பிஜேபி’ என்கிற வாசகத்துடன் கும்மனம் ராஜசேகருடன் உள்ள படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சந்தீப். கேரள அரசுக்கு எந்த தொடர்பும் இல்லாததங்க கடத்தல் வழக்கில் முதல்வர் அலுவலகத்துக்கு எதிராக திசைதிருப்பும் நோக்கத்துடன் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜகவுக்கும் அதற்கு துணைபோகும் காங்கிரசுக்கும் பெரும்பின்னடவை சந்தீபின் தொடர்புகள் ஏற்படுத்தியுள்ளன.   

தொடரும் தங்க கடத்தலும் பாஜகவும்
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒரு ஆண்டுக்கு முன்பு 25 கிலோ தங்கத்தை டிஆர்ஐ அதிகாரிகள் பிடித்தபோது அதை விடுவித்தது பாஜக தலைவர்கள். 2019 மே 13 இல் தங்கம் கடத்திய வழக்கில் சுங்கத்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அந்த வழக்கில் முன்னேற்றம்இல்லை. பின்னர் சிபிஐ விசாரணைக்கு சென்றாலும் வேறு எவரையும் வழக்கில் உட்படுத்தாமல் அதே நிலையில் உள்ளது இந்த வழக்கு. அதன் பிறகு 10 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த வழக்கிலும் கடத்திய இருவர் கைதுசெய்யப்பட்டதோடு விசாரணை முடங்கியது. தங்க கடத்தலில் சுங்கத்துறை அதிகாரிகளின் பங்கு குறித்து அப்போது மத்திய அரசுக்குவருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் அறிக்கை சமர்ப்பித்தது. 2019 செப்டம்பரில் அனுப்பிய கடிதத்தில் வெளியுறவு அமைச்சகத்தின் சில உயர்நிலையில் உள்ளவர்களின் தலையீடு குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனால் அதுவும் வெறும் காகிதமாகிப்போனது.

;