tamilnadu

img

கேரளத்தில் கொரோனா பாதிப்பு 272

திருவனந்தபுரம்:
கேரளத்தில் செவ்வாயன்று 272 பேருக்கு கோவிட்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. 157 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 38 பேர் இதர  மாநிலங்களில்  இருந்தும் கேரளத்துக்கு வந்தவர்கள்.செவ்வாயன்று கோவிட்  ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகுசெய்தியாளர் சந்திப்பில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மேலும் கூறியதாவது: செவ்வாயன்று தொடர்புகள் மூலம் 68 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.இதில் 15 பேரது நோய் தொற்றிடம் தெரியவில்லை. ஏழு
பேர் சுகாதார ஊழியர்கள். இருவர் ராணுவ வீரர்கள்.111 பேர் குணமடைந்தனர்.செவ்வாயன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 7516 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 1,86,576  பேர்  கண்காணிப்பில் உள்ளனர். 384பேர் மருத்துவமனைகளில் புதிதாக அனுமதிக் கப்பட்டனர். மருத்துவமனைகளில் 3034 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். மாநிலத்தில் 18 புதிய கட்டுப்பாட்டு பகுதிகள் அறிவிக்கப்பட்டன. தற்போது கேரளம்முழுவதுமாக 169 ஹாட் ஸ்பாட்டுகள் உள்ளன. ஊரடங்கு துவங்கிய பிறகு கேரளத்துக்கு இதுவரை  மாநிலத்துக்கு வெளியில் இருந்தும், நாட்டுக்குவெளியில் இருந்தும்  4,99529 பேர் திரும்பி வந்துள்ளனர்.

;