tamilnadu

img

மாலத்தீவில் இருந்து கொச்சிக்கு 698 பயணிகள் கப்பலில் வருகை; தமிழ்நாட்டினர் 187 பேர்

கொச்சி, மே 10- கொரோனா குறித்த அச்சத்துடன் மாலத்தீவில் சிக்கிய 698 இந்தியர்கள் கப்பற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ஜலாஸ்வா கப்பலில் கொச்சி வந்தடைந்தனர்.  வெள்ளியன்று இரவு மாலத்தீவில் இருந்து புறப்பட்ட கப்பல் ஹெலிகாப்டர் மற்றும் ராணுவ படகுகளின் பாதுகாப்புடன் கொச்சி துறைமுகத்துக்கு ஞாயிறன்று காலை 9.30 மணிக்கு வந்து சேர்ந்தது. பயணிகளில் 630 பேர் வேலை இழந்து நாடு திரும்பியுள்ளனர். அனைவருக்கும் கோவிட் பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் யாருக்கும் நொய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. கேரளத்தைச் சேர்ந்த 460 பயணிகளில் 19 கர்ப்பிணிகள், 14 குழந்தைகள் உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 187 பேர், ஆந்திரபிரதேசம் 8, தெலுங்கானா 9, ராஜஸ்தான் 3, தில்லி 4 என 18 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழ்நாட்டினர் 7 அரசுப் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்.        கேரளத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். கர்ப்பிணிகள், குழந்தைகள் வீடுகளில் கண்காணிப்பில் இருக்குமாறு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் அந்தந்த மாவட்டங்களில் அரசின் தனிமை முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 

;