tamilnadu

img

முதல்வர் பதவி எனக்கு முக்கியமில்லை... பாஜகவின் முகத்திரையைக் கிழிக்க முடிந்தால் அதுவே போதும்!

பெங்களூரு:
கர்நாடக சட்டப்பேரவையில், அரசுமீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ள, அம்மாநில முதல் வர் எச்.டி. குமாரசாமி, மும்பையில் முகாமிட்டுள்ள அதிருப்தி எம்எல்ஏக் களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றைஎழுதியுள்ளார். 
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: அதிருப்தி எம்எல்ஏ-க்கள் எல்லோரும் மீண்டும் கூட்டணிக்கு வர வேண்டும்.அவ்வாறு வந்தால் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார். நீங்கள் வாருங் கள், நாம் அமர்ந்து பேசலாம். உங்கள் பிரச்சனைகளை சொல்லுங்கள். நான் தீர்த்து வைக்கிறேன்.

நீங்கள் தீய சக்தியுடன் சேர வேண்டாம். ஆட்சியை கைப்பற்ற அவர்கள்என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.இந்திய ஜனநாயகத்தை குலைத்து, அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து ஆட்சியை பிடிப்பார்கள். அவர்களுடன் நீங்கள் சேரக் கூடாது.ஒழுக்கக்கேடான மற்றும் சட்டவிரோத வழிகள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை லட்சியமாகக் கொண்டுள்ள பாஜக, தற்போது என்னை உடனடியாக ராஜினாமா செய்யுமாறு கோரிக்கை விடுக்கிறது. மேலும், நம்பிக்கைத் தீர்மானத்தை உடனடியாக நடத்தியே தீரவேண்டும் என ராஜ்பவன் மூலம் அழுத்தம் தருகிறது.நம்பிக்கை வாக்கெடுப்பை நாங்கள் தள்ளிப் போட்டுதான் வருகிறோம். இதற்குகாரணம் இருக்கிறது. நான் ஆட்சியில் இருக்க விரும்பவில்லை. எனக்கு பதவிஆசை இல்லை. ஆனால் பாஜகவின் முகத்திரையை கிழிக்க வேண்டும். பாஜக எப்படி எல்லாம் எம்எல்ஏ-க்களைவிலைக்கு வாங்க முயற்சி செய்கிறது என்று உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும்.

பாஜக எப்படி ஜனநாயகத்தை உடைக்கிறது. எப்படியெல்லாம் சட்டங்களை வளைக்கிறது என்று மக்களுக்கு இப்போது தெரிந்து இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அவர்களை எப்படி எல்லாம் கவிழ்க்க பார்க்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். இதை வெளியே கொண்டு வர வேண்டும் என்று நினைத் தேன். அதனால்தான் நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப்போட்டு வருகிறேன்.எனவே, எங்கள் கூட்டணியிலிருந்து விலகிச் சென்ற எம்எல்ஏ-க்கள் தயவுசெய்து சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கிறேன்.இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.

;