tamilnadu

img

மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு ஒப்புதல் தேவை இல்லையாம்!

கர்நாடக அரசு சொல்கிறது

பெங்களுரூ,அக்.6- மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவை இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு, கர்நாடக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மெட்ராஸ் மற்றும் மைசூர் மாகாணங்களுக்கு இடையே 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டு களில் போடப்பட்ட ஒப்பந்தத் தின் படி, காவிரியின் குறுக்கே அணை கட்ட வேண்டு மானால், இரு மாகாண அரசு களும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டி ருந்தது. ஆனால் இந்த ஒப் பந்தத்தை பொருட்படுத்தா மல் மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி கேட்டு சுற்றுச்சூழல் அமைச்சகத் தில் கர்நாடக அரசு விண்ணப் பித்தது. அதை பரிசீலித்த அந்த அமைச்சகம், தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி சுமூக தீர்வுக்கு வருமாறு அறிவுறுத்தியது.

இந்நிலையில் அக்டோ பர்  4 ஆம் தேதி மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு கர் நாடக அரசு அனுப்பியுள்ளது.அக்கடிதத்தில், 2018 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையில் தமிழகத்திற்கான நீரை வழங்குவதற்காகவே அணையைக் கட்டுவதாக வும் தமிழகத்திற்கான நீரை திறந்து விடுவதற்கு இந்த அணை மிகவும் அவசியம். மேகதாதுவில் அணை கட்டி னால் குறைவான வனப்பகுதி மட்டுமே நீரில் மூழ்கும் என்ப தால் அந்த இடத்தை தேர்வு செய்ததாக குறிப்பிடப்பட் டுள்ளது.

;