tamilnadu

img

எச்எல்எல் நிறுவனத்தை கொரோனா தடுப்பு ஆய்விற்கு பயன்படுத்துக

செங்கல்பட்டு, ஜூலை 31- மத்திய அரசு நிறுவனமான எச்எல்எல் நிறுவனத்தை கொரோனா பரிசோதனை ஆய்வகமாக பயன்படுத்த வலியுறுத்தி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக் குன்றம் வட்டம், திருமணி கிராமத்தில் எச்எல்எல் பயோடெக் லிமிடெட் (எச்பிஎல்)  என்ற நிறுவனம் உள்ளது. ஒருங்கிணைந்த  தடுப்பூசி தயாரிக்கும் இந்த நிறுவனம் 100  ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.  தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டம்  594 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப் பட்டுள்ளது. இந்நிறுவனம் வணிக நடவ டிக்கைகளைத் தொடங்குவதற்கு முன்பே  மூடப்படும் நிலையில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றிய சுமார் 200 ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. புதிய தடுப்பூசி  உற்பத்தி செய்வதற்காக அமைக்கப்பட்ட விலையுயர்ந்த, அதிநவீன உபகரணங்கள் செயல்பாட்டுத் திறனை இழந்து வரு கின்றன. இந்நிலையில் அனைத்து ஆய்வக வசதி களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நிறு வனத்தை உடனடியாக மத்திய அரசு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதற்கான ஆய்வகமாக மாற்றிட நிதி ஒதுக்க வேண்டும், தனியார் நிறுவனங்கள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க முனைப்பு  காட்டிவரும் நிலையில் அரசு உடனடியாக இந்த பணியை துவக்கிட விரைவான நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என  வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மபா.நந்தன்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வா.பிரமிளா, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தமிழ்பாரதி உள்ளிட்டோர் பேசினர்.

;