tamilnadu

img

இடதுசாரிக்கட்சிகளின் போராட்டத்தில் மதச்சார்பற்ற கட்சிகளும் பங்கேற்க வேண்டும்

சீத்தாராம் யெச்சூரி அழைப்பு

புதுச்சேரி,செப். 26  அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி  முதல் 16 ஆம் தேதி  வரை இடதுசாரிக்கட்சிகள் நடத்தவுள்ள நாடு தழுவிய போராட்டத்தில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும், அமைப்புகளும் பங்கேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அழைப்பு விடுத்துள்ளார். புதுச்சேரியில் வியாழனன்று (செப். 26) அவர்  செய்தியாளர்களி டம் பேசியதாவது: தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு வரவுள்ளனர். இந்துக்கள் அல்லா தோரைக் குடிமக்கள் அல்லாதோர் என அகற்றும் திட்டமே இது. தேசிய மக்கள் தொகை பதிவேடு 2020ல் வீடுவீடாக சென்று விவரம் பதிய உள்ளனர். 1951ல் யாரெல்லாம் இந்தியக் குடிமக்களாக இருந் தார்கள் எனப் பட்டியலிட உள்ளனர். புதுச்சேரி இந்தியாவில் 1954ல்தான் இணைந்தது. கோவா 1961ல்தான் இணைந்தது. பாஜகவின் அரசியல் ஆதாயத்துக்காக இந்துத்துவ ராஜி யத்தை உருவாக்கும் சித்தாந்தத்துக் காக அரசியல் சாசனத்தை நொறுக் கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல். இந்தியப் பொரு ளாதாரம் சரிவை நோக்கிச் செல்கிறது. ஐந்து ரூபாய் பிஸ்கெட் பாக்கெட் கூட விற்காமல் சரிவைச் சந்தித்துள்ளது. வடநாட்டில் டீ, பிஸ்கெட் சாப்பிட்டு வாழ்வோரும் அதிகமுண்டு. ஏனெனில் சாதாரண மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை. அதை உருவாக்க நடவடிக்கை எடுக்காமல் கார்ப்பரேட், ஏற்றுமதி யாளர்களுக்கு நிதி உதவி தந்தனர். எந்த நிதி தந்தாலும் ஏற்றுமதி உயராது.

மக்களிடம் வாங்கும் சக்தியை அதிகரித்தால்தான் பொருளா தார மந்த நிலை மாறும். பணக் காரர்களுக்குத் தருவதற்குப் பதி லாக நாட்டின் உள்கட்டமைப்பை உருவாக்கும் பணியில் செய்திருக்க லாம். கிராம சாலைகள், நீர்நிலை கள் மேம்பாடு போன்ற பலவற்றைச் செய்யலாம். இதனால் புதிய வேலை வாய்ப்பு உருவாகி மக்களிடம் பணம் புழக்கம் ஏற்படும். இதனால் வேலைவாய்ப்பு உருவாகும். இதை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து வரும் அக்டோபரில் 10 முதல் 16ம் தேதி வரை போராட்டத் தில் நாடு முழுவதும்  ஈடுபட உள் ளோம். அதில் அனைத்து மதச்சார் பற்ற கட்சிகளும், அமைப்புகளும் பங்கேற்பது அவசியம்.  மோடி அரசு இந்தியாவில் இருப்பது போல் அமெரிக்காவில் டிரம்ப் அரசு உள்ளது. தேர்தல் பிரச்சா ரத்துக்காக வங்க தேசத்தைச் சேர்ந்த  திரை நட்சத்திரம் மேற்குவங்கத் துக்கு வந்தபோது தடுக்கப்பட்டது. ஜனநாயகம் சார்ந்த உள்நாட்டு விஷயத்தில் வெளிநாட்டவர் தலை யிடக்கூடாது என்று தடுக்கப்பட்டது. அதேநேரத்தில்  இந்தியப் பிரதமர், அமெரிக்காவில் டிரம்புக்காக பிரச்சாரம் செய்கிறார். வெளி நாட்டு வாழ் இந்தியர்களிடம் வாக்கு  சேகரிக்கிறார். அவர்கள் சரி யாகவே வாக்களிப்பார்கள்.

அரசியல் சாசனத்தின் பல்வேறு அம்சங்கள் நசுக்கப்படுவதற்கு உதா ரணம் காஷ்மீர். முழுமையான மாநி லம் அழிக்கப்பட்டு விட்டது. இன்றும் அரசியல் சாசனத்தில் 370வது பிரிவு நீடிக்கிறது. அதை நிறுத்தி வைத்துள்ளதே உண்மை அம்சம். அங்கிருக்கும் மக்கள்தான் தீவிர வாதத்துக்கு எதிராகப் போராடு கின்றனர். அவ்வாறு போராடு வோரே வீட்டுக்காவலில் வைக்கப் பட்டு தகவல் தொடர்பைத் துண்டித் துள்ளனர். 12 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளதை திட்ட மிட்டு மறுக்கிறார்கள். மோடி இதை  மறைத்து புதியதைப் படைத்ததாக காட்டுகிறார். அதிகளவில் தவ றான விஷயங்கள் பரப்பப்பட்டு வருகிறது. நாங்கள் இவ்விஷயத்தை சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவே அணுகுகிறோம். 370வது பிரிவு தொடர்பான வரலாற் றைத் திரிப்பதையும் மக்களிடத்தில் கொண்டு செல்கிறோம். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பதிலளித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகநயினார், பெருமாள், பிரதேச செயலாளர் ராஜாங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

;