tamilnadu

img

மறைமுக கட்டண உயர்வு?

குமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் கிராமப்புற  மக்கள் ஒரு பேருந்தில் ஏறி மற்றொரு பேருந்துக்கு மாறுவதற்குள்  கட்டணம் உயர்த்தப்படுகிறது. பல வகையில் இந்த அரசு மறைமுகமாக பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருப்பதை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்  விஜயபாஸ்கர், மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் மறைமுகமாக பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை என்றும் அப்படி ஏதாவது  இருந்தால் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தால் உரிய நடவ டிக்கை எடுக்கப்படும்” என்றார்.

;