tamilnadu

img

45 லட்சம் பேர் விவசாயத்திலிருந்து கூலித்தொழிலாளியாக மாறிய அவலம்

சிஐடியு கர்நாடக மாநிலச் செயலாளர் மீனாட்சிசுந்தரம் தகவல் 

காஞ்சிபுரம், செப். 22- கர்நாடக மாநிலம் வலதுசாரி அரசியலின் ஆயத்தக் களமாக உள்ளது என்றும் விவசாய த்திற்கு அரசு ஆதரவு அளிக்காத காரணத்தால் 45லட்சம் பேர்  அதை விட்டுவிட்டு நகர்புற கூலித் தொழிலாளியாக மாறியுள்ளதாக சிஐடியு கர்நாடக மாநிலச் செயலாளர் மீனாட்சிசுந்தரம் கூறியுள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சிஐடியு 14ஆவது மாநில மாநாட்டை வாழ்த்தி அவர் பேசியது வருமாறு: கர்நாடகாவில் மக்கள் யாருக்கு வாக்களித்தார்களோ அவர்கள் அந்த கட்சியில் இருப்பதில்லை. 3 ஆண்டுகளில் 3 ஆட்சிகள் மாறியுள்ளன.ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கருத்துகூறும் எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைப்பது போன்ற சம்ப வங்கள் அரங்கேறுகின்றன. ஊழல் செய்தவர்கள் எல்லாம் இன்று பாஜகவில் இணை கிறார்கள். வலதுசாரிகளிடம் இருந்து  உழைப்பாளி மக்களைக் காக்கும் ஒரே இயக்கம் செங்கொடி இயக்கம்தான். 

தொழில் வளர்ச்சியில் தமிழ கத்திற்கும் கர்நாடகாவிற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெங்களூரு மட்டும்  கணிசமான பங்களிப்பை அளிக்கிறது. 30 மாவட்டங்களில் பெங்களூருக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்படு கின்றது  மற்ற மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி இல்லாத விவசாயத்தைச் சார்ந்த மாவட்ட ங்களாக உள்ளன. முதலாளி களை பிரதிநிதித்துவப்படுத்தும் கர்நாடக தொழில் வர்த்தக சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் 2 ஆண்டுகளில் விவசாயத்தை விட்டு நகர்புறத்திற்கு கூலித் தொழிலாளர்களாக  வந்திருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை 45 லட்சம் என்று கூறியுள்ளது.அதில் பெரும்பான்மையானோர் பெங்களூரு நகரத்திற்கு வந்துள்ளனர். 

விவசாயத்தில் மண்ணோடு இருந்த எல்லா இணைப்பு களையும் துண்டித்துக்கொண்டு உழைப்பை விற்றால் மட்டுமே வாழமுடியும் என்ற நிலையில் பாட்டாளி  வர்க்கம் உள்ளது.என்றால் நாடு அபாயகரமான நிலையை நோக்கிச் சென்று கொண்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும். பொருளா தார மந்தநிலை ஒரு  இரவில் வந்தது இல்லை. மாநிலத்தில் உள்ள 69 ஆயிரம் சிறுகுறு தொழிற்சாலைகள் பெங்களூரூ உள்ளிட்ட நான்கு மாவட்டங்க ளில் உளளது. இந்த நிலையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. கர்நாடகாவின் பட்ஜெட் என்று பார்த்தால் பெங்களூரூ தான். மற்ற மாவட்டங்களுக்கு ஏதும் கிடையாது. அதனால்தான் சிறு மழை வந்தால் கூட பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் இருக்கக் கூடிய தொழிற்சங்கங்களில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட முதன்மை தொழிற்சங்கமாக சிஐடியு உள்ளது.

குறைந்தபட்ச கூலிக்காக 2008ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக நடத்தியதின் விளைவாக 2017ஆம் ஆண்டு அரசுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 37  துறைகளில் முதன்முறையாக குறைந்தபட்ச கூலி 12 ஆயிரம் ரூபாயாக நிர்ண யிக்க முடிந்தது. இதற்கு எதிராக 2500 ரிட் மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் நீதிமன்றம் குறைந்த பட்ச கூலி என்பது சரியாக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. எனவே அறிவித்த நாளிலிருந்து 6 விழுக்காடு வட்டியுடன்  தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு அளித்தது. அறிவிக்கப்படாத மற்றத் துறைகளுக்கும் இதை பெற முயன்று வருகின்றோம். முதலாளிகள் பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டி தொழிலாளர்களை வஞ்சித்து லாபம் ஈட்ட முயற்சிக்கின்றனர். இந்த நிலையை எதிர்த்து, இதன் பின்னால் உள்ள அரசியலை அனைத்து பகுதி மக்களிடமும் அம்பலப்படுத்தி வலதுசாரி சக்திகளை, தொழிலாளர் விரோத ஆட்சியை முறிய டிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
 

;