tamilnadu

img

பசு மட்டுமே ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறதாம் - பாஜக முதல்வர்

டேராடூன்
பசு மட்டுமே ஆக்ஸிஜனை வெளியற்றும் ஒரே விலங்கு  என்று உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பேசி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
மோடி தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டில் பல பகுதிகளிலும் அப்பாவி மக்கள் கடுமையாக தாக்கப்படுகின்றனர். குறிப்பாக சங்கபரிவார் அமைப்புகள் தலித்களையும், இஸ்லாமியர்களையும் திட்டமிட்டு தாக்கி பலரை கொலை செய்துள்ளனர். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் விழாவொன்றில் பசுவின் பால் மற்றும் சிறுநீரின் மகத்துவம் தொடர்பாக திரிவேந்திர சிங் ராவத் பேசும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. திரிவேந்திர சிங் ராவத் பேசுகையில், பசுக்கள் ஆக்ஸிஜனை உள்ளிழுப்பது மட்டுமல்லாமல் அதை வெளியேற்றுகிறது. பசுவை மசாஜ் செய்வது சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு உதவும், அதே சமயம் விலங்குடன் நெருக்கமாக வாழ்வதால் காசநோயை குணப்படுத்த முடியும் என அறிவியலுக்கு புறம்பாக தெரிவித்துள்ளார். 

;