tamilnadu

சர்வதேச மரவள்ளி கிழங்கு இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் இந்திய விவசாய சங்கம் கோரிக்கை

ஈரோடு, ஜூன் 7- சர்வதேச அளவிலான மரவள்ளி கிழங்கு இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என இந்திய விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து இந்திய விவசாயிகள் சங்கம் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழக மர வள்ளிக் கிழங்கு உள்ளிட்ட பிராந்திய வேளாண் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி சர்வதேச அளவில் சந்தைப்ப டுத்த ரூ. 10 ஆயிரம் கோடியை ஒதுக்குவதாக மத்திய நிதிய மைச்சர் அறிவித்தார். இதன் மூலம் மரவள்ளிக்கிழங்கை  அப்பளம், சேமியா போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருட் களாக மாற்றி உலக அளவில் சந்தைப்படுத்தப்படும். அப் போது தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்யும் மரவள்ளி கிழங்கு முக்கியத்துவம் பெறும். ஆனால், 2019-ல் கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் 20 ஆயிரம் டன்க ளுக்கும் அதிகமான ஸ்டார்ச் இறக்குமதியானது. இது இந்தி யாவில் தயாராகும் ஸ்டார்ச்சுக்கு சமமானது. இது தமிழ்நாட் டில் மரவள்ளி சாகுபடிக்கு ஏற்ற எதிர்காலத்தை உருவாக் காது. எனவே, மரவள்ளி ஸ்டார்ச் இறக்குமதிக்கு முற்றுப் புள்ளி வைத்து தமிழக விவசாயிகளின் எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;