tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தல் வார்டு வரைமுறை குளறுபடிகள் சரிசெய்யக்கோரி மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

கோபி, டிச. 10-  கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி ஊராட்சிக்குட்பட்ட அய்யம்பா ளையம் கிராமத்தில் வார்டு வரை முறையில் ஏற்பட்ட குளறுபடியை சரிசெய்யக்கோரி ஈரோடு–சத்திய மங்கலம் தேசிய நெடுஞ்சாலை யில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறிகையில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி ஊராட்சிக் குட்பட்ட அய்யம்பாளையம் கிராமத்தில் ஒன்றாவது வார்டில் இருந்த 371 வாக்காளர்களில் 192 வாக்காளர்கள் நான்காவது வார்டுக்கு மாற்றம் செய்யப்பட் டுள்ளனர். இதனால் ஒன்றாவது வார்டில் உள்ள வாக்காளர்கள் நான்கு கிலோமீட்டர் தொலை வில் உள்ள தென்காட்டுப்பாளை யம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடிக்கு சென்றுவர போதிய போக்குவரத்து வசதி கள் இல்லை. இதனால் வயதான வர்கள் வாக்களிக்க முடியாத சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு பேரில் இரண்டு பேருக்கு ஒன்றாவது வார்டில் வாக்களிக்கும் உரிமையும், இரண்டு பேருக்கு நான்காவது வார்டில் வாக்களிக்கும் உரிமை யும் வழங்கப்பட்டுள்ளது. இவ் வாறு வார்டு வரைமுறையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட் டுள்ளதாகவும், ஒரே வீதிக்கு இரண்டு உள்ளாட்சி உறுப்பி னர்கள் இருந்தால் அடிப்படை வசதிகளை யாரிடம் கேட்டுப் பெறுவது என்று கேள்வி எழுப்பி யுள்ளனர்.  இந்நிலையில் வார்டு வரை முறையில் உள்ள குளறுபடிகளை சரிசெய்யக்கோரி அய்யம்பா ளையம் கிராம பொதுமக்கள் ஈரோடு - சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய போது போராட்டத்தை தொடரப் போவதாக பெதுமக்கள் அறிவித்த னர். பின்னர் அங்கு வந்த பவானி  வட்டாட்சியர் மற்றும் தேர்தல்  பிரிவு அலுவலர்கள் வாக்காளர்க ளின் கோரிக்கையை ஏற்று மாற்று  ஏற்பாடு செய்வதாக உறுதிய ளித்ததை தொடர்ந்து போராட் டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். 

;