tamilnadu

img

ஆன்லைனில் கசிந்த ஈகுவேடர் நாட்டு மக்களின் தனிப்பட்ட தகவல்கள்!

ஈகுவேடர் நாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈகுவேடர் நாட்டில் வசிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட பெரும்பாலான மக்களின் தனிப்பட்ட தகவல்கள், வலைதளங்களில் கசிந்து வருவதாகவும், அதனை உடனடியாக சரி செய்யும்படி அண்மையில்  இசட்டி நெட் (ZD NET) என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம், அந்நாட்டின் கணினி சார்ந்த அவசர கால குழுவை தொடர்பு கொண்டு எச்சரித்துள்ளது.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது, ஈகுவேடர் அதிபர் லெனின் மொரெனோ, விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே உள்பட சுமார் 1.7 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆன்லைனில் கசிந்திருப்பது தெரியவந்தது.  முழுப்பெயர், பிறப்பிடம் மற்றும் பிறந்த தேதி, கல்வித் தகுதி, செல்போன் எண், தேசிய அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்கள் கசிந்ததுள்ளன.

இதை அடுத்து, ஈகுவேடரியன் மார்க்கெட்டிங் அண்ட் அனாலிடிக்ஸ் (Ecuadorean marketing and analytics) என்ற நிறுவனத்தின் சர்வர் மூலம் 1.7 கோடி ஈகுவேடர் நாட்டு மக்களின் தகவல்கள் கசிந்துள்ளது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் மக்களின் தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளதை உறுதி செய்த அந்நாட்டு உள்துறை அமைச்சர் மரிய பவுலா, இந்த தகவல் கசிவு அரசு மற்றும் மாநிலங்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் விவகாரம். இதற்கு காரணமானவர்களை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாகவும், சைபர் பாதுகாப்பு குறித்து அந்நாட்டின் தொலைத்தொடர்பு அமைச்சகம் முழுமையாக ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

;