tamilnadu

img

தொடரும் பதற்றம் இரவு முதல் இலங்கையில் ஊரடங்கு

கொழும்பு 

கிறிஸ்தவர்களின் புனித நாளான ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்து 350-க்கும் அதிகமானோர் பலியானார்கள். 

மிகக்கொடூரமான இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் இலங்கையில் மறைந்துள்ளதாக அதிபர் சிறீசேனா அறிவித்த சில மணிநேரங்களில், கல்முனை பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக சிறப்பு அதிரடிப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 


கல்முனை பகுதிக்கு விரைந்த அதிரடிப் படையினர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது பயங்கரவாதிகளுக்கும் அதிரடிப் படையினருக்கும் இடையே நடைபெற்ற சண்டை மூண்டது. பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டில் திடீரென குண்டு வெடித்தது.இதில் 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் உட்பட 15 பேர் பலியாகினர்.வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே ஒரு கிலோ வெடிபொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அடுத்தடுத்து பயங்கரவாதிகள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்வதால் இலங்கையில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


கல்முனை, சாய்ந்தமருது, சவலக்கடை பகுதிகளில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

;