tamilnadu

img

கொரோனா பரவலுக்கு ‘ஏற்பாடு’ செய்த அரசு நிர்வாகம்

மதுரை, ஏப்.24- மதுரை மாவட்டத்தில் கொரோன தொற் றால் பாதிக்கப்பட்டு 52 பேர் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அது மட்டுமல்ல, கொரோனா தொற்றில் முதல் உயி ரிழப்பை தமிழகம் சந்தித்தது மதுரையில் தான். 

இந்த நிலையில் மதுரை ஆட்சியர் பெய ரில் அவசர அவசரமாக வியாழன் இரவு ஒரு அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில் வாகனங்கள் அனுமதிச் சீட்டு பெற்றே இயங்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. இதை யடுத்து வெள்ளிக்கிழமை மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பால் வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள் உள்ளிட்ட அன்றாடங்காய்ச்சி கள் அனுமதிச் சீட்டு பெறுவதற்காக சமூக இடைவெளியின்றி சுமார் ஆயிரம் பேர் திரண்ட னர். அவர்கள் ஆட்சியரை சந்தித்து அனு மதிச்சீட்டு பெறவேண்டுமென குரல் எழுப்பி னர். இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வந்த காவல்துறையினரும் சிறிது கூட சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூச்சலும்-குழப்பமுமாக இருந்தது.

இதற்கிடையில் இரு குடும்பத்தினர் ரேசன்கார்டு, ஆதார் அட்டைகளை கையில் வைத்துக்கொண்டு தங்களது மகள்களை பிரசவத்திற்காக அழைத்துவர வேண்டும். வாகன வசதி ஏற்பாடு செய்ய வேண்டுமென கதறினர். “எம்” செக்சனுக்கு போங்கள், “பி” செக்சனுக்கு போங்கள், “பின்னால் உள்ள அலுவலத்திற்கு போங்கள்”. “இல்லை... இல்லை முதல் மாடிக்குச் செல்லுங்கள்” என அவர்களை ஆளுக்காள் சுற்றலில் விட்டனர். அவர்கள் என்ன செய்வதென அறியாமல் திகைத்து நின்றனர்.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டத்தில் சிக்கிக்கொண்ட ஒரு அதிகாரி, எந்த அனுமதியும் தேவையில்லை. பழைய பாஸ்களையே பயன்படுத்துங்கள், இது ஆட்சியர் உத்தரவு என திடீரென அறிவித்தார். ஆட்சியர், அலுவலகத்திற்கே வராத நிலை யில் எழுத்துப்பூர்வமாக தர வேண்டிய அறி விப்பை வாய்மொழியாக அறிவித்தனர்.

இதற்கிடையில் கூடியிருந்த மக்கள், ஆட்சியர் சொல்வது இருக்கட்டும்; எங்களைப் பிடிப்பது போலீஸ்; அபராதம் கட்டச் சொல்வது போலீஸ்; அவர்களைக் கேட்டால் எங்கள் அதி காரி உத்தரவுப்படி நாங்கள் உங்களை அனு மதிக்கமாட்டோம் என்பார்களே அதற்கு என்ன செய்வது எனக் கேட்டதற்கு எந்த காவல்துறை அதிகாரியிடமிருந்தும் உரிய பதில்லை. அவர்கள் கூட்டத்தைக் கலைப்பதிலேயே குறி யாக இருந்தனர். பெண்கள், இப்படி அலைக் கழித்து எங்களைக் கூட்டத்தில் சிக்க வைத்து கொரோனாவை பரப்புகிறார்களா எனக் கேட்டனர்.

ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே யும் ஒரு பெருங்கூட்டம் வாகன அனுமதிக்காக காத்திருந்தது. நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.

வெளியில் திரண்டிருந்த கூட்டத்தை எப்படிக் கலைப்பது என யோசித்த ஒரு காவல் துறை அதிகாரி “கையில் லத்தியுடன் நின்றி ருந்த பத்து பதினைந்து காவலர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு, “யப்பா, யாரையும் அடிக்காதீங்க... அடிக்கிற மாதிரி ரூட்டக் கொடுங்க” என உத்தரவிட்டார். இதை யடுத்து அந்த காவல் அதிகாரி முன்னால் ஓட, பின்னால் லத்தியோடு காவலர்கள் ஓட ஏதோ தடியடி நடப்பது போன்ற ஒரு காட்சியை அவர் கள் அரங்கேற்றினர். அவர்கள் பின்னால் பத்தி ரிகையாளர்களும் ஓடினர். வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணி வரை கூட்டம் கலைய வில்லை.

இதற்கிடையில் ஆட்சியர் அறிக்கை வெளியான சில மணி நேரத்தில் ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசிய விஷயமுள்ள நபர் ஒருவர், உங்கள் அறிவிப்பு பொருத்தமானதாக இல்லையே... மறு பரிசீலனை... மாற்று வழி களை யோசிக்கலாமே... என்று கூறியுள்ளார். மாநகர் காவல் துறையின் கருத்தை தட்டமுடி யாத மாவட்ட நிர்வாகம் சமாளிக்கலாம் என்று கூறியிருக்கிறது.

;