tamilnadu

img

நம்பிக்கையில்லா தீர்மானம்: பேரவைத் தலைவர் விளக்கம்

சென்னை, ஜூலை 1- தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப. தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக பேரவைத்தலைவரிடம் திமுக தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. பின்னர் அதை திரும்பப் பெறுவதாக  தி.மு.க சார்பில்  கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து பேரவைத்தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டது.  இதை திங்களன்று (ஜூலை 1) சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார்.  கடந்த 30.4.2019 அன்று பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் கடிதம் கொடுக்கப்பட் டது. பின்னர் அதை கைவிடுவதாக கடந்த 28 ஆம் தேதி முறைப் படி கடிதம் அளிக்கப்பட்டது. அது ஏற்கப்பட்டுள்ளது. எனவே பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வலியுறுத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.

;