tamilnadu

img

5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை திணிப்பதா?

மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டனம்

சென்னை, செப்.21- ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்-2016 கடந்த மூன்று ஆண்டு களாக அமலில் உள்ளது.  இச்சட்டப் படி, பள்ளி செல்லும் மாற்றுத்திறன் குழந்தைகளின் தேவைகள் குறித்து ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை கணக்கீடு(சர்வே) அரசு நடத்த வேண்டும். முதல் சர்வேயை  சட்டம் அமலுக்கு வந்த இரண்டாண்டுகளுக்குள் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு, இச்சட்டபூர்வ கடமையை செய்யவே இல்லை.  அதேவேளையில், சமீபத்திய  2009-கட்டாய கல்வி உரிமை திருத்தச் சட்டத்தை மேற்கோள்காட்டி, அவசர அவசரமாக 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்த தமி ழக பள்ளிக் கல்வித்துறை அர சாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மன அழுத்தத்தையும், பாதிப்பையும், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் இத்திட்டத்தை, ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த  வேண்டும் என்று தமிழ்நாடு  அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. 

இச்சங்கத்தின் மாநிலத் தலை வர் பா.ஜான்சிராணி, பொதுச் செய லாளர் எஸ். நம்புராஜன் ஆகி யோர் விடுத்திருக்கும் அறிக்கை யில்,“தமிழக கிராமப்புறங்களில் மனவளர்ச்சி பாதிப்பு, கற்றல் குறை பாடு, செவித்திறன் பாதிப்பு, பார்வை குறைபாடு உள்ளிட்ட பல்வகை மாற்றுத்திறன் குழந்தை களுக்குரிய பள்ளிகளே இல்லை. அவர்களின் சிறப்புத் தேவைகளை நிறைவேற்ற அரசு மற்றும் ஊராட்சி பள்ளிகளில் கட்டமைப்புகளும் மோசமாகவே உள்ளன.  உரிய பிரச்சாரம், விழிப்புணர்வை, அரசு ஏற்படுத்தாத காரணத்தால், பள்ளி சேரும் வயதை கடந்து 9, 10 வயது களில்கூட மாற்றுத்திறன் குழந்தை களை பள்ளிகளில் சேர்க்கும் நிலைமையே இன்றளவும் தமிழ கத்தில் தொடர்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் ஊட்டி யில் உள்ள அரசு செவித்திறன் பாதித்தோர் பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய ஒரு மாண வர் கூட தேரச்சி பெறவில்லை.  10, 12 ஆம் வகுப்பு பொதுத்  தேர்வு களிலேயே இப்போதும் இப்படி பாதிப்பு உள்ள நிலையில் 5, 8  ஆம் வகுப்பிலேயே பொதுத்தேர்வு  என்பது, மாற்றுத்திறன் குழந்தை களை தேர்வுகள் பெயரில் பாதி யிலேயே வெளியேற்ற உதவும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். ஊனமுற்றோர் உரிமைகள் சட்ட விதிகளுக்கு முறணாக இயற்றப்பட்டுள்ள கட்டாயக் கல்வி திருத்த சட்டத்தை மட்டுமே,  காரணம் காட்டி, 5, 8 ஆம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு நடத்த அர சாணை வெளியிட்டுள்ளது பயன ளிக்காது. எனவே, இந்த அரசா ணையை திரும்பப்பெற வேண்டும்  என்றும் வலியுறுத்தியிருக்கி றார்கள்.

;