tamilnadu

img

இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை, ஏப்.10- தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஏப்ரல் 11 மாலை 5 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலை மையில் நடைபெறுகிறது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெறுகிறது. இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். 

இந்நிலையில் சனிக்கிழ மையன்று மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட் டம் நடைபெற உள்ளது. தலை மைச் செயலகத்தில் முதல மைச்சர் தலைமையில் நடை பெறும் இந்தக்கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். இதில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்து ஆலோசிக் கப்படலாம் என்று கூறப்படுகிறது.

;