tamilnadu

img

தேசிய ஊக்க மருந்து சோதனை ஆய்வகத்துக்கு தடை!

இந்திய விளையாட்டு வீரர்களுக்கான தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்துக்கு வழங்கப்பட்ட
அங்கீகாரத்தை, உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையமான வாடாவின் தனிக்குழுவினர், சமீபத்தில் மேற்கொண்ட  ஆய்வில் இந்தியாவின் ஊக்கமருந்து சோதனை ஆய்வகமான என்.டி.டி.எல்’லின் சோதனை முறைகள், சர்வதேச தரத்துக்கு இணையாக இல்லை என்பது தெரிய வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வாடா தெரிவித்துள்ளது.

மேலும் இந்த 6 மாத காலத்தில் இந்திய தேசிய ஊக்கமருந்து சோதனை முறை ,சர்வதேச சோதனை முறைக்கு நிகரானவை என நிரூபிக்க வேண்டும்.அப்படி நிரூபிக்க தவறினால் கூடுதலாக 6 மாதம் காலம் தடை விதிக்கப்படும் என வாடாவின் தனிக்குழு தெரிவித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு வருடத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், இந்த அங்கீகார ரத்து இந்திய விளையாட்டுத்துறைக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
 

;