tamilnadu

img

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.ஆடவர் 52 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் இந்திய வீரர் அமித் பங்கால் - தென்கொரிய வீரர் கிம் இங்கியூவை எதிர்கொண்டார்.தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் அமித் பங்கால் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த ஆண்டில் அமித் பங்காலுக்கு இது இரண்டாவது சர்வதேச தங்கமாகும். 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கவிந்தர் சிங் பிஸ்த், 49 கிலோ பிரிவில் இந்தியாவின் தீபக் சிங், ஆஷிஷ் குமார் (75 கிலோ) ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்தனர்.

;