tamilnadu

img

பாலத்திற்கு அடியில் தூக்கில் தொங்கவிடப்பட்ட கிரேட்டா தன்பெர்க்

பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா சபையில் உரையாற்றிய இயற்கை போராளி கிரேட்டா தன்பெர்க்கின் உருவப்பொம்மை இத்தாலி பாலத்திற்கு அடியில் தொங்கவிடப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாட்கள் சபையில் பருவ நிலை மாற்றம் குறித்து மாநாடு நடந்தது. இதில் சுவீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க் கலந்து கொண்டு ஆவேசமாக உரையாற்றினார். இதற்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் எனவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இத்தாலியின் ரோம் நகரில் உள்ள பாலத்திற்கு அடியில் கிரேட்டா தன்பெர்க்கின் உருவப்பொம்மை தொங்கவிடப்பட்டுள்ளது. அதில் கிரேட்டா உங்கள் கடவுள் என ஆங்கிலத்தில் எழுதி உள்ளனர். இச்செயலை செய்த நபரை தேடி வருவதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.

;