tamilnadu

img

80 ரூபாயை தொட்ட பெட்ரோல் விலை!

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், மும்பையில் இன்று அதிகபட்சமாக பெர்ரோல் விலை 80 ரூபாயை தொட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வரும் நிலையில், இன்று இந்தியாவில் அன்றாட மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 15 பைசா வரை அதிகரித்துள்ளது. அதே போல், ஒரு லிட்டர் டீசல் விலை 10 பைசா வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 80 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இது, மும்பையில் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 74.43 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 67.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 77.03 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 69.66 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 80.00 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 70.55 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 77.28 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 71.09 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மகாராஷ்டிராவின், பர்பானி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 81.93 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 71.31 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. 

சவூதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனத்தின் மீதான ட்ரோன் தாக்குதலினால், செப்டம்பர் 17 முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது. அப்போதில் இருந்து, விலைகள் தினமும் அதிகரித்து வருகின்றன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.26 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 1.66 ரூபாயும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;