tamilnadu

img

மனித முகத்துடன் பிறந்த வினோத கன்றுக்குட்டி!

அர்ஜெண்டினாவில் மனித முகத்துடன் பிறந்த வினோத கன்றுக்குட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அர்ஜெண்டினாவில் உள்ள வில்லா அனா என்ற கிரமத்தில், விவசாயி ஒருவரின் வீட்டில் மனித முகத்துடன் கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. இந்த கன்றுக்குட்டியின் முகம் மற்றும் மூக்கு, மனித முகத்தில் உள்ளதை போன்று சிறிதாக இருந்துள்ளது. கன்றுக்குட்டியின் தலை மிகவும் பெரிதாக இருந்ததால், அதனால் எழுந்து நிற்க முடியாமல், பிறந்த 2 மணி நேரத்திலே அது இறந்துவிட்டது.
இந்நிலையில், இந்த வினோத கன்றுக்குட்டியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இது குறித்து, மரபியல் நிபுணர் நிகோலாஸ் மாக்னகோ கூறுகையில், ”ஒரு அரிய மரபணு மாற்றத்தின் காரணமாக இந்த கன்றுக்குட்டி மனித முகத்துடன் பிறந்திருக்கலாம். இது போன்ற மரபணு மாற்றம், பசுவின் டி.என்.ஏயின் மூலமாகவோ அல்லது இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் காரணங்களால் நடந்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். 

இதேபோல், முன்னதாக இந்தியாவில் உள்ள சிம்லாவில் இரு தலைகள், இரண்டு வாய்கள் மற்றும் நான்கு கண்களுடன் பிறந்துள்ளது. இதை அடுத்து, உதய்பூரில், கடந்த 2019-ல் கன்றுக்குட்டியின் இரண்டு கண்களும் ஒட்டி இருந்தவாறு பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;