tamilnadu

img

கேரளத்தில் தீவிர கண்காணிப்புக்கு ‘ஜியோ வேலி்’ உள்ளூர் குழுக்கள் அமைப்பு: அமைச்சர் கே.கே.சைலஜா

திருவனந்தபுரம், ஏப்.24- வெளிநாடுகளிலிருந்து கேரளத்திற்கு திரும்பி வரும் அனைவரும் 28 நாட்கள் கட்டாய கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். ஜியோ பென்சிங் என்கிற நவீன தொழில்நுட்பத்தின் துணையுடன் கடுமையான கண்காணிப்பை களப்பணியாளர்கள் மேற்கொள்வார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறினார்.

விமான நிலையத்தில் நடத்தப்படும் பரிசோ தனையில் நோய் தொற்று கண்டறியப்படுவோர் கொரோனா கேர் சென்டர்களுக்கு மாற்ற ப்படுவார்கள். மற்றவர்கள் தனி வாகனத்தில் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். வீடுகளில் கண்காணிப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்பற்கு தகவல் தொழில்நுட்பத் துறையின் சேவை பயன்படுத்தப்படும். ‘ஜியோ பென்சிங்’ தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிப்பில் உள்ளவர் தனிமனித இடைவெளியை பின்பற்றுகிறாரா என்பது உறுதி செய்யப்படும். புவியியல் வரைபடத்தின் மூலம் முதியவர்களை கண்காணிக்கும் திட்டமும் அரசிடம் உள்ளது.

கண்காணிப்பு காலத்தில் கொரோனா கண்டறியப்பட்டால் அடுத்த நாட்களில் அவருடன் தொடர்பு கொண்டவர்களை தெரிந்துகொள்ள ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். கண்காணிப்பு முறையாக தொடர்கிறது என்பதை உறுதிப்படுத்த கிராம நிர்வாக அலுவலர்கள், காவல் துறையினர், சுகாதார ஊழியர்களைக் கொண்ட உள்ளூர் குழுக்கள் அமைக்கப்படும். வெளிநாடுவாழ் கேரளியர் திரும்பி வரும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை தெளிவுபடுத்தி அதற்கான விதிமுறைகளை சுகாதாரத்துறை உடனடியாக வெளியிடும். விமான நிலையத்தில் பரிசோதனைக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அமைச்சர் கே.கே.சைலஜா கூறினார்.

;