tamilnadu

கிராம ஊராட்சி மன்றங்களின் நிர்வாகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என புகார் மனு

அரியலூர், ஆக.4- கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஊராட்சிக ளில் நிர்வகிக்க அனுமதிக்க வேண்டும் என ஊராட்சி மன்ற  தலைவர்கள் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலு வலரிடம் புகார் மனு அளித்தனர். தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 19 ஊராட்சி தலை வர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ஸ்ரீதே வியிடம் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில், தா. பழூர் வட்டாரத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு ஊராட்சி மன்றங்களின் நிர்வாகத்திற்கு இதுவரை நிதி வழங்கப்படவில்லை. கொ ரோனா தொற்று ஏற்பட்டு அதன் காரணமாக ஊராட்சி மன்ற  செலவுகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகளும் இதுவரை ஒதுக்கப்ப டவில்லை.

14-வது மாநில நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ்  ஒதுக்கப்பட்ட நிதியை, ஊராட்சிகளில் நிர்வாக செலவி னங்கள், பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது, பிளீச்சிங்  பவுடர் உள்ளிட்ட கிருமிநாசினிகள் வாங்குவது, தெரு விளக்கு களுக்கு தானியங்கி மின்பொறி வாங்குவது போன்ற செலவி னங்களுக்கு இந்த நிதியை பயன்படுத்த அதிகாரிகள் அறி வுறுத்தி உள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஆளும் கட்சி தலையீடுகளோடு நடைபெற்று வருகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி ஊராட்சி மன்றங்க ளின் நிர்வாகத்தில் அரசியல் குறுக்கீடு இல்லாத சூழ்நிலையை  வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்ய வேண்டும் என்று  கோரிக்கை வைத்தனர். ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் உலகநாதன் தலைமையில் 19 ஊராட்சி தலைவர்கள்  ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர்.

;