tamilnadu

img

பாரிஸ் பருவநிலை மாற்றம் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவிப்பு

பாரிஸ் பருவநிலை மாற்றம் உடன்படிக்கையில் இருந்து விலகுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை அமெரிக்க அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவித்துள்ளது.

உலக வெப்பமயமாதல் பிரச்சினை தொடர்பாக கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், நியூயார்க் நகரில் சர்வதேச மாநாடு நடந்தது. இதில் ’பாரிஸ் பருவநிலை மாற்றம்’ என்ற பெயரில் ஒரு உடன்படிக்கை ஒன்று உருவானது. இதில், உலகளவில் 56 சதவீதத்துக்கும் அதிகமான பசுமை குடில் வாயுக்கள் வெளியேற்றத்துக்கு காரணமான 72 நாடுகள் உள்பட 188 நாடுகள் கையெழுத்திட்டன. கையெழுத்திட்ட நாடுகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட நாடுகள், இதை முறைப்படி ஏற்று இதுதொடர்பான ஆவணங்களை ஐ.நா சபையிடம் அளித்தன. 

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவி வகித்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகப்போவதாக  கடந்த 2017-ஆம் ஆண்டில், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதனால், நியாயமற்ற முறையில் அமெரிக்காவுக்கு பெருமளவிலான பொருளாதார சுமை ஏற்படுவதால் இனியும் இதில் நீடிக்க முடியாது என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை அமெரிக்க அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, வரும் 2020-ல் அதிகாரப்பூர்வமாக இந்த உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என குறிப்பிட்டுள்ளார்.
 

;