tamilnadu

img

வார இறுதி நாட்களில் ஐநா தலைமையகம் மூடப்படும் - ஐநா டிவிட்டரில் அறிவிப்பு

கடுமையான நிதி நெருக்கடி காரணமாக, வார இறுதியை நாட்களில் ஐநா தலைமையகம் மூடப்படும் என்று ஐநா அதன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. சபையின் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை ஒத்திவைத்தல், செலவுகளைக் குறைத்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாக, அதன் பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தேரெஸ் இந்த ஆண்டு தொடக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது, நிதி நெருக்கடி காரணமாக நியூயார்க்கில் உள்ள ஐநாவின் தலைமையகம் இனி வார இறுதி நாட்களில் மூடப்படும் என்று ஐநா அதன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், ஐ.நா பட்ஜெட்டுக்கான பணம் வழங்கிய உலக நாடுகளின் விவரம் பற்றிய ஆவணத்தையும் வெளியிட்டுள்ளது. இதில்,  ஐநா.சபையில் உள்ள 131 நாடுகளில், இந்தியா உள்பட 35 நாடுகள் மட்டுமே முழுமையாக செலுத்த வேண்டிய தொகையை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகள் முழுத்தொகையை செலுத்ததால், ஐநா.சபைக்கு கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

;