tamilnadu

img

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி போராட்டம்... புலம்பெயர் தொழிலாளர் மீது குஜராத் போலீசார் தாக்குதல்...

அகமதாபாத்:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. எனினும், உரிய திட்டமிடல் இல்லாமல் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பெரும் பாலான மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.பாதிக்கப்பட்டவர்களை சொந்த ஊருக்குஅனுப்பி வைக்கும் பணிகளை துரிதமான வகையில் எடுக்காததால், தில்லி, மும்பை என முக்கிய நகரங்கள் பலவற்றில் போராட்டங்கள் வெடித்தன. 

அந்த வகையில் குஜராத் மாநிலம் சூரத் தில் வேலைபார்த்து வந்த வெளிமாநில மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தாங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கக் கோரி, திங்களன்றுஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைப் போலீசார் வலுக்கட்டாயமாக கலைக்க முயன்றதையடுத்து, ஒருகட்டத்தில், தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையிலான மோதலாக போராட் டம் மாறியது. இதனால் அப்பகுதியில் பெரும்பதற்றம் ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், ஒருவாரத்திற்குள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்குரயில்களில் அனுப்பி வைக்கப்படுவார்கள்என உறுதி அளித்து சமாதானப்படுத்தியுள்ளனர்.
 

;