states

img

வரும் 25 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு - கர்நாடக அரசு

கர்நாடகாவில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் வரும் 25 ஆம் தேதி முதல் திறக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.  

கர்நாடகாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அதே ஆண்டின் இறுதியில்  கொரோனா தொற்று குறைந்ததால் 6  முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. ஆனால் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. கடந்த மார்ச் மாதம் கொரோனா 2வது அலையால் மீண்டும் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன.

மீண்டும் தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த செப்., மாதம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.  இந்நிலையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் வரும் 25 ஆம் தேதி திறக்கப்படும். முதல் ஒரு வாரம் மதியம் வரை செயல்பட அனுமதி அளிக்கப்படும்.

அதன் பிறகு பள்ளிகள் முழுமையாக செயல்படும். நவ., 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படும். வகுப்பறைகளில் 50 சதவீத குழந்தைகளை மட்டுமே அமர வைக்கப்படுவர் என  கர்நாடக கர்நாடக அரசு அமைச்சர் நாகேஸ் கூறினார்.   

;