states

img

புதுச்சேரியில் வேலையின்மை அதிகரிப்பு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குற்றச்சாட்டு

புதுச்சேரி, ஏப். 18- புதுச்சேரியில் வேலை யின்மை 47 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குற்றம் சாட்டி யுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச தலைவர் பாஸ்கர், செயலாளர் ஆனந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறிய தாவது: 2014இல் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பிரத மர் மோடி வேலை வாய்ப்பு களை உருவாக்க வில்லை. ஒன்றிய அரசு துறை களில் 60 லட்சம் பணி யிடங்கள் காலியாக உள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்ற வாக்குறுதியை ஒன்றிய பாஜக அரசு நிறை வேற்ற வேண்டும். அதே போல், புதுச்சேரியில் 2.5லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்து  காத்துள்ளனர். இந்தியா விலேயே புதுச்சேரியில்தான் வேலையின்மை 47 விழுக் காடாக உயர்ந்து ள்ளது. இத னால் புதுச்சேரி வாலிபர்க ளின் எதிர்காலம் கேள்விக்  குறியாகியுள்ளது. புதுச்சேரி அரசு துறை களில் 10 ஆயிரம் காலி பணி யிடங்கள் உள்ளது. அவற்றை முழுமை யாக நிரப்ப வேண்டும். ஏ. எப்.டி, சுதேசி, பாரதி பஞ்சா லைகளை  நவீனப்படுத்தி புதிய வேலை வாய்ப்பு களை உருவாக்க வேண்டும். இளைஞர்களை அத்துக்கூலியாக மாற்றி வரும் போக்கு அதி கரித்துள்ளது. எனவே தனி யார் நிறுவனங்களை முறைப்படுத்தி குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ரூ.21 ஆயிரத்தை உறுதி படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்கள். இச்சந்திப்பின்போது நிர்வாகிகள் சஞ்சய், லீலாவதி ஆகியோர் உடனி ருந்தனர்.

சைக்கிள் பிரச்சார பயணம்
முன்னதாக ஏப்ரல் 20ஆம் தேதி மாலை சுதேசி பஞ்சாலை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவர் நாகை மாலி, எம்எல்ஏ கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அதனை தொடர்ந்து 21ஆம் தேதி காலை லாஸ்பேட்டையில் உள்ள நேதாஜி சிலையில் இருந்து இளைஞர்களுக்கு வேலை கொடு என்ற முழக்கத்தோடு துவங்கும் சைக்கிள் பிரச்சார பயணத்தையும் நாகை மாலி எம்எல்ஏ தொடங்கி வைக்கிறார். இதில் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு புதுவை முழுவதும் சைக்கிளில் சென்று வேலை கொடு என்று பிரசாரம் செய்ய உள்ளனர். லாஸ்பேட்டையில் துவங்கும் சைக்கிள் பிரச்சார பயணம் அன்று இரவு பாகூரில் நிறைவடைகிறது. இந்த சைக்கிள் பிரச்சார பயணமானது புதுச்சேரி, சென்னை, கன்னியாகுமரி, கோவை ஆகிய நான்கு பகுதிகளில் இருந்து திருச்சியில் மே 1 ஆம் தேதி சங்கமிக்கிறது. புதுச்சேரியில் இருந்து 10 இளைஞர்கள் பிரச்சார பயணத்தில் கலந்து கொள்கின்றனர்.

;