states

img

அப்போ எங்க போனே ராசா? - ஆரூரான்

எங்க போனே ராசா?
பணமதிப்பிழப்புல பணத்தை     பறிகொடுத்தோமே
அப்போ எங்க போனே ராசா?
வியாபம் ஊழலில் உலகமே சிரிப்பா     சிரிச்சதே…
அப்போ எங்க போனே ராசா?
மாட்டுக்காக மனுசனை கொன்றார்களே..
அப்போஎங்க போனே ராசா?
இடித்தது தப்புன்னு சொன்ன இடத்திலேயே
கோயில் கட்டிட்டாங்களே..
அப்போ எங்க போனே ராசா?
அமலாக்கத்துறையை காட்டி பணம்     பறித்தார்களே
அமலாக்கத்துறையினரே பணம் சுருட்டினரே...
அப்போ எங்க போனே ராசா?
கல்விக்கடனை தள்ளுபடி செய்ய மாட்டேன்னு,
அதானி, அம்பானிக்கு 7 லட்சம் கோடி தள்ளுபடி செய்தாங்களே…..
அப்போ எங்க போனே ராசா?
கொரோனாவில் கொத்துக் கொத்தாய்     செத்தோமே…
தடுப்பூசி கூட கிடைக்கலையே 
அப்போ எங்க போனே ராசா?
கொரோனாவை ஒழிக்க, வீட்டிலும்     வெளியிலும் தட்டச்சொன்னாங்களே…    அப்போ  எங்க போனே ராசா?
கொரோனா சரியாக இரவில் டார்ச் லைட்     அடித்தோம்…
சிலர் மாட்டு கோமியம் குடித்தோம்... 
அப்போ எங்க போனே ராசா?
மாற்றுக்கருத்துக்கூறியவர்களை     சிறையிலடைத்தார்களே…
சித்ரவதை செய்தார்களே
அப்போ எங்க போனே ராசா?
விவாதமே நடத்தாமல் சட்டம் போட்டாங்களே..
எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தார்களே
அப்போ எங்க போனே ராசா?
ரயில்வே, இன்சூரன்ஸ், விமானம், மின்சாரம் தனியாருக்கு வித்தாங்களே…
அப்போ எங்க போனே ராசா?
கார்ப்பரேட் கடன்களுக்கு சலுகை  அளித்து ஏழை எளியவர்களை குப்புறத்தள்ளுனாங்களே 
அப்போ எங்க போனே ராசா?
கல்வி, சுகாதாரம், 100நாள் வேலை மானியம்  வெட்டி சுருக்கினாங்களே
அப்போ எங்க போனே ராசா?
பிரிவு 370 ரத்து மூலம் காஷ்மீர் மக்களை வஞ்சித்தாங்களே
அப்போ எங்க போனே ராசா?
மணிப்பூர் கலவரம் அனல் பறந்ததே 
இளம் பெண்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செஞ்சாங்களே
உங்க ஆட்சி கண்டுக்கவே  இல்லையே..
அப்போ எங்க போன ராசா? 
கடந்த 10 வருசமா மக்களுக்கு
எதையும் செய்யலையே உங்க ஆட்சி...
இப்ப ஏன் வந்த ராசா?
கதையடிச்சு கண்ணாமூச்சி காட்டினாலும் புதிய பிம்பத்தை கட்டமைத்தாலும் ஒன்றிய ஆட்சி மாற்றத்தை தடுக்க முடியாது ராசா? 
மக்கள் உங்கள வீட்டுக்கு அனுப்ப
தயாராகிட்டாங்க போ ராசா போ....

;