states

சின்ன(ம்)புள்ளத்தனமா இருக்கே..!!

பொதுவா தேர்தலின் போது அரசியல் கட்சிகள்  இதர அரசியல் கட்சிகளோடு கூட்டணி வைப்பாங்க. சில பேர் தனியா நின்னாலும்  மக்களோடும் அந்த ஆண்டவனோடும் தான் கூட்டணின்னு வசனமெல்லாம் கூட  பேசுவாங்க.. ஆனால், பாஜக தான் எல்லாத் திலும் வித்தியாசமான கட்சி ஆச்சே.. வருமான வரித்துறை அமலாக்கத்துறை கூடவெல்லாம் கூட்டணி வெச்சிருக்கும் கட்சி இப்ப தேர்தல் கமிஷனோடவும் கூட்டணி போட்ருக்காங்க.. ஆமாங்க, திருவிளையாடல் படத்துல  மண்டபத்துல யாரோ எழுதிக் கொடுத்ததை கொண்டு வந்து வாசிக்கற தருமியை போல பாஜக எழுதிக் கொடுக்கிற வசனத்தை தேர்தல் கமிஷன் அப்படியே வாசிக்குது..கட்சிகளுக்கு அவங்க கேட்ட சின்னம் ஒதுக்கற விஷயத்தில தேர்தல் கமிஷன் அடிக்கற கூத்தெல்லாம் வேற லெவல்ல இருக்கு.. விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னம் கேட்டாங்க. ஆனா கடந்த  நாடாளுமன்றத் தேர்தல்ல பதிவான  மொத்த ஓட்டுல விசிக ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே  ஓட்டு வாங்கி இருக்குன்னு சொல்லி பானை சின்னத்தை மறுத்திருக்கு தேர்தல் ஆணையம். பம்பரம் சின்னம் கேட்ட மதிமுக கட்சிக்கு, குறைந்தபட்சம் ரெண்டு தொகுதியில் போட்டியிட்டாதான் நீங்க கேட்கிற சின்னம் கொடுக்க முடியும் இல்லன்னா கொடுக்க முடியாதுனு கை விரிச்சிட்டாங்க.

இது வரைக்கும் எல்லா தேர்தலிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி  இந்த முறையும் அதைக் கேட்டு தேர்தல் ஆணையத்திட்ட போனப்ப, இல்லை இல்லை. முதலில் வரு பவருக்கே முன்னுரிமைன்னு ஒரு பதிலை சொல்லி வேற ஒரு லெட்டர்பேடு கட்சிக்கு இந்த சின்னத்தை கொடுத்திருச்சு தேர்தல் ஆணையம்.  ஆனா, தமிழ்நாட்டில பாஜகவோட கூட்டணி வச்சிருக்கிற தினகரனோட அமமுக கட்சிக்கும், வாசனோட தமிழ் மாநில காங்கிரசுக்கும் அவங்க கேட்ட சின்னத்த ஒதுக்கி கொடுத்திருக்கு தேர்தல் ஆணையம்.  ஓஹோ, அதனாலதான் நாங்க ஒன்னு தான்  கேட்டோம். ஆனா ரெண்டா குடுத்திட்டாங்கன்னு தினகரன் புல்லரிச்ச தும்,  நாங்க ஒன்னு கேட்டுதான் கேட்டை  தட்டுனோம். ஆனா மூணு குடுத்து சைக்கிள் ஏத்தி அனுப்பிட்டாங்க. வேட்பாள ரை தேடி புடிக்கறதுக்குள்ள கண்ணு  வேர்த்திருச்சுன்னு வாசன் புலம்புனதெல் லாம் இதனால் தானோ.? நல்லாருக்குய்யா உங்க டீலிங்.  இப்படியே மெய்ன்டன் பண்ணுங்க.. இதுல உலகத்திலேயே பெரிய ஜனநாயகத் திருவிழா, அது இதுன்னு என்று வசனம் வேற..

 - ஆர்.பத்ரி

;