states

பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்கள்

பெய்ஜிங்,செப்.18- சீனா விண்வெளியில் ஒரு விண்வெளி நிலையத்தை அமைத்து வரு கிறது. தியான்ஹே எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலை யத்துக்கான மையப்பகுதி கடந்த ஏப்ரல் மாதத்தில் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.  தியான்ஹே விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக நை ஹைஷெங், (56) லியு போமிங் (54) மற்றும் டாங் ஹோங்போ (45) ஆகிய 3 விண்வெளி வீரர்கள் கடந்த ஜூன்  16 அன்று சென்ஷு 12 விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் விண்வெளி நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவ தற்கான பணிகளில்  ஈடுபட்டனர். இதற்காக  2 முறை விண்வெளி நடை பய ணத்தையும் மேற்கொண்டனர். திட்டமிட்டபடி 90 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்த சீன விண்வெளி வீரர்கள் 3 பேரும்  சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள கோபி பாலைவனத்தில் சென்ஷு 12 விண் கலம்  மூலம் தரையிறங்கினர்.  விண்வெளி வீரர்கள் 3 பேரும் நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக  சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

பஞ்சாப் முதல்வர் ராஜினாமா

சண்டிகர்,செப்.18- பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள  காங்கிரஸ் அரசின் முதலமைச்ச ரான  அம்ரீந்தர் சிங், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  ராஜினாமா கடிதத்தை, பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் சனிக்கிழ மையன்று வழங்கினார். பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கிற்கும் எம்எல்ஏக் கள் மற்றும்  மூத்த தலைவர்களுக்கும்  இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் அதிகாரப்பூர்வமாக தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 

;