states

img

மோடியின் வெறுப்புப் பேச்சிற்கு ராஜஸ்தான் மாநில பாஜக கடும் எதிர்ப்பு

18-ஆவது மக்களவைத் தேர்தலில் “இந்தியா” கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருவதால் தோல்வி பயத்தில் பிரதமர் மோடி இந்து - முஸ்லிம் மக்களி டையே வன்முறையை தூண்டும் வகையில்  வெறுப்புப் பேச்சுக்களை வரம்பு மீறி கட்ட விழ்த்து விட்டு வருகிறார். கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடை பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி,  “அதிக குழந்தை பெற்றுக் கொள்பவர்கள்; ஊடுருவல்காரர்கள்” என முஸ்லிம்களை இழிவுபடுத்தி பேசினார். மோடியின் இந்த வெறுப்புப் பேச்சிற்கு “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் உட்பட நாடு முழுவதும் கண்டனம் குவிந்து வரும் நிலையில், ராஜஸ்தான் மாநி லத்தில் சொந்த கட்சிக்குள்ளேயே மோடிக்கு  எதிராக அதிருப்தி அலை தீவிரமடைந்துள் ளது. 

ராஜஸ்தான் மாநில பாஜகவின் முக்கிய தலைவரும், சிறும்பான்மை (முஸ்லிம்) பிரி வுத் தலைவருமான உஸ்மான் கனி, “தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு பிறகு,  பாஜகவுக்கு வாக்கு கேட்க முஸ்லிம்களிடம் செல்லும்போது, பிரதமர் கூறிய கருத்து களைப் பற்றி மக்கள் கேள்வி கேட்கிறார்கள். ஒரு முஸ்லிம் என்பதால், பிரதமர் கூறியதில் நான் பெரும் ஏமாற்றமடைந்தேன். நான் பேசு வதற்கு கட்சி என் மீது நடவடிக்கை எடுத்தா லும் பயப்பட மாட்டேன். மேலும் பாஜக மீது  ஜாட் சமூகத்தினரும் கடுமையான கோபத்தில்  இருக்கிறார்கள். அதனால், இந்த தேர்தலில் பிரதமரின் இந்தப் பேச்சால் ராஜஸ்தான் மாநி லத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்படும்” எனத் தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து பாஜக தலைமை, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி சிறுபான்மை பிரிவுத் தலை வர் உஸ்மான் கனியை முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கு வதாக அறிவித்துள்ளது.

;