states

img

கேரளாவில் 4 மாவட்டங்களில் மும்மடங்கு ஊரடங்கு..... உயர் காவல் அதிகாரிகளுக்கு பொறுப்பு.....

திருவனந்தபுரம்:
ஞாயிறன்று (மே 16) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும்மும்மடங்கு ஊரடங்கு (டிரிபிள்லாக் டவுன்) மீது கடுமையான கட்டுப்பாடு விதிக்கப் படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள் ளார். இதற்காக 10,000 காவல்துறையினர் பொறுப்பாக்கப்பட் டனர். ஒவ்வொரு பகுதியும் செக்டர்களாகப் பிரிக்கப்பட்டு, மூத்த காவல்துறை அதிகாரிகள் பொறுப்பு ஆக்கப்பட்டுள்ளனர்.திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் மும்மடங்கு ஊரடங்கு அமலாகும். மற்ற மாவட்டங்களில், ஊரடங்கு 23 ஆம் தேதி வரை தொடரும். டிரிபிள் லாக் டவுன் என்பதுநோயின் பரவலைக் கட்டுப் படுத்த மிகவும் கடுமையான வழியாகும். குறிப்பிட்ட இந்த மாவட்டங்களின் எல்லைகள் மூடப்படும். அடையாள அட் டையுடன் வரும் தேவையான பிரிவுகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே பயண அனுமதி கிடைக்கும். ஒரு சாலையைத் தவிர கட்டுப்பாட்டு மண்டலம் முற்றிலும் மூடப்படும். தேவையற்ற முறையில் வெளியே செல்வது, கூட்டம் கூடுவது, முகமூடி அணியாமல் இருப்பது, நெறிமுறையை மீறுவது அனைத்தும் கடுமையான நடவடிக்கைக்கு உட்பட்டவை.

ட்ரோன் ஆய்வு
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மீறல்களைக் கண்டறிய ட்ரோன் சோதனை மற்றும் ஜியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். தனிமைப்படுத்தலை மீறுபவர் களுக்கு உதவி செய்பவர்கள் மீது கேரள தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.தேவைப்படுவோருக்கு வார்டு கமிட்டி உணவு வழங்கும்.இதற்கு சமூக சமையலறைகளும் ஜனகீய ஓட்டல்களும் பயன்படுத்தப்பட வேண்டும். மும்மடங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மற்றஅனைத்து சமூக நடவடிக்கைகளும் முற்றிலுமாக தடை செய்யப்படும்.

-     மருந்தகம், பெட்ரோல் நிலையம் செயல்படும்-     காலை 6 மணிக்கு முன்னர்செய்தித்தாள்கள் மற்றும் பால் வீடுகளுக்கு வழங்கப்பட வேண்டும்

-    வீட்டு வேலை செய்வோர்மற்றும் வீட்டு செவிலியர் கள் ஆன்லைன் பாஸ் மற்றும் பயணத்துக்கான அனுமதி பெறலாம்.

-    பிளம்பர்ஸ் மற்றும் எலக்ட்ரீஷியன்கள் ஆன் லைன் பாஸ் வாங்கி அவசரகாலத்தில் பயணம் செய்யலாம்.

-    விமான பயணிகள் மற்றும் ரயில் பயணிகளுக்கு அனுமதி உண்டு.

-    மாற்று நாட்களில் (ஒருநாள் விட்டு ஒருநாள்) பேக்கரி மற்றும் மளிகை கடைகள் திறந்திருக்கலாம்

-    வங்கிகள் செவ்வாய்மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குறைந்தபட்ச ஊழியர்களுடனும், கூட்டுறவு வங்கிகள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமேசெயல்பட முடியும்.

-    மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மும்முறை ஊரடங்கு மாவட்டங்களுக்குள் நுழைய முன் அனுமதி பெறவேண்டும்.

;