states

img

கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே 31-இல் தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மே 31-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஜூன் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலம் தென்மேற்கு பருவமழைக் காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரு நாள் முன்பாக மே 31-ஆம் தேதியே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு இந்தியாவில் சராசரியாக 96 முதல் 104 சதவிகித மழை பெய்யும். கடந்த 50 ஆண்டு சராசரியான 87 சென்டிமீட்டர் மழை பொழிவை இந்த ஆண்டு தாண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் இயல்பை விட அதிகமாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் அதே வேளையில் வட இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. பஞ்சாப், ஹரியானா, தில்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத் மற்றும் வடமேற்கு மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;