states

img

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்  

கேரளாவில் கனமழை பெய்து வருவதால் 5 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  

தென்மேற்கு பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.  

இதனால் இன்றும் நாளை எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு மற்றும் கண்ணுர் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்  விடுக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து காசர்கோடு மாவட்டத்தைத் தவிர மற்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  

ரெட் அலர்ட் என்பது 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு அதிகமாக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்வதை குறிக்கும் முன்னறிவிப்பு ஆகும். ஆரஞ்சு அலர்ட் என்றால் 6 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்வதை குறிக்கும். 6 முதல் 11 செ.மீ வரை அதிக மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்பு இருந்தால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.  

கேரளா கடற்கரையில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

;