states

img

இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் கேரளத்தில் 67 % வாக்குகள் பதிவு

திருவனந்தபுரம், ஏப். 26 - கேரளத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதி களுக்கான தேர்தலில் வெள்ளியன்று மாலை 6 மணி வரை 67.27 சதவிகிதம் வாக்கு பதிவாகின. 18-ஆவது மக்களவைத் தேர்தல் நாடு முழு வதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்  கட்டமாக கடந்த ஏப்ரல் 19 அன்று தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 64 சதவிகிதம் வாக்கு பதிவானது.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக கேரளத்தில் 20 தொகுதிகள் உட்பட 13 மாநி லங்களில் 88 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26 வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.  இதில், கேரளத்தில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் காலை முதலே நீண்ட வரிசை யில் ஆண்களும் பெண்களும் காத்திருந்து வாக்க ளித்தனர். மாலை 5 மணி நிலவரப்படி 64.73 சத விகிதம் வாக்குகளும், மாலை 6 மணியளவில் 67.27 சதவிகித வாக்குகளும் பதிவாகின.

அதிக பட்சமாக கண்ணூர் தொகுதியில் 71.54 சதவிகித வாக்குகள் பதிவாகின. மிகக் குறை வாக பத்தனம்திட்டை மக்களவைத் தொகுதியில் 62.08 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், எல்.டி.எப். கன்வீனர் இ.பி. ஜெயராஜன், அமைச்சர்கள் ஜெ. சிஞ்சு ராணி, வி. அப்துரஹிமான், எம்.பி. ராஜேஷ், கிருஷ்ணன் குட்டி, கே. ராதாகிருஷ்ணன், வீணா  ஜார்ஜ், பி. பிரசாத் ஆகியோர் அதிகாலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.

கேரளத்தில் 2 கோடியே 77 லட்சத்து 49 ஆயிரத்து 159 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 20 தொகுதிகளில் 194 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. பெரும்பாலான வாக்குப்பதிவு மையங்களில் பிற்பகலுக்குப் பிறகு அதிக அள வில் வாக்காளர்கள் வந்தனர்.

6 மணிக்குப் பிறகு பல மையங்களிலும் நூற்றுக்கணக்கான வாக்கா ளர்கள் வரிசையில் காத்திருந்தனர். இரவு 7 மணிக்குப் பிறகும் வாக்குப்பதிவு நீடித்தது. இதனால், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் அதி கரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கேர ளத்தில் 81.3 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி யிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற மாநிலங்கள்

கேரள மாநிலத்தோடு மேலும் 11 மாநி லங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்றது. இங்கு மாலை 5 மணி நில வரப்படி பதிவான வாக்குகள் விவரம் வருமாறு: 1. அசாம்  -  70.66%, 2. பீகார் - 53.03%, 3. சத்தீஸ்கர் -  72.13%, 4. கர்நாடகா  -  63.90%, 5. மத்தியப் பிரதேசம் - 54.83%, 6. மேற்கு வங்கம்  - 71.84%, 7. மகாராஷ்டிரா  - 53.51%, 8. மணிப்பூர்  - 76.06%,  9. ராஜஸ்தான்  -  59.19%, 10. திரிபுரா  -   77.53%, 12. உத்தரப்பிரதேசம் -  52.74%, 13. ஜம்மு - காஷ்மீர்  -  67.22 சதவிகிதம்.

;