states

img

கேரளத்தில் சந்தர்ப்பவாத நிலையெடுக்கும் காங்கிரசில் தொடர முடியாது.... கொச்சியில் 100 குடும்பங்கள் சிபிஎம்-மில் இணைந்தன....

கொச்சி:
கொச்சி சட்டமன்றத் தொகுதியில், காங்கிரசில் இருந்து விலகிய சுமார் 100 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளனர்.

உள்ளூர் தலைவர்களான கே.பி. அஷ்ரப், எம் சத்யன், பி.எச். அப்துல் சலாம் ஆகியோர் தலைமையில், காங்கிரசிலிருந்து வெளியேறிய அவர்கள், சிபிஎம் உடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளனர்.கடந்த உள்ளாட்சி தேர்தலில் யுடிஎப் வேட்பாளராக போட்டியிட்ட இந்து ஜோதிஷும் காங்கிரசில் இருந்து விலகியுள்ளார். மகளிர் காங்கிரஸ் தலைவர்களான ரிதி செபாஸ்டியன், ஜான்சி ஜாய், ஐ.ஆர், மஞ்சுளா, முன்னாள் காங்கிரஸ் தொகுதித் தலைவர் கே.எஸ். சைபுதீன், தொகுதி பொதுச் செயலாளர் அயூப் சுலைமான், காங்கிரஸ் வடக்குத் தொகுதி பொதுச்செயலாளர் ஜோதிஷ் ரவீந்திரன் உள்ளிட்டோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளனர்.கேரள காங்கிரஸ் தலைவர்களின் சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து அக்கட்சியிலிருந்து விலகுவதாகவும், வெகுஜன செல்வாக்கு பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.முன்னதாக நிகழ்ச்சிக்கு பி. அஷ்ரப் தலைமை தாங்கினார். கட்சியில் இணைய முன்வந்தவர்களை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.என். மோகனன் வரவேற்றார்.

;