states

img

பெண்கள் கல்வியும் அதிகாரமும் பெற்ற கேரளம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு

திருவனந்தபுரம்: கேரளத்தில்  பெண்கள் அதிகம் படித்தவர்களாக வும், அதிகாரம் பெற்றவர்களாகவும் உள்ளனர். நாட்டிலேயே சிறந்த பெண்-ஆண் விகிதத்தைக் கொண்டுள் ளது கேரளம். இது பெண்கள் உட்பட  அதிக கல்வியறிவு விகிதத்தையும் எட்டியுள்ளது என கேரளத்துக்கான தனது முதல் பயணத்தில் குடி யரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டினார். கேரள அரசால் ஏற்பாடு செய்யப் ்பட்டிருந்த குடிமக்கள் வரவேற்பைப் பெற்றுக் கொண்டு குடும்பஸ்ரீயின் ‘ரச்சனா’ உள்ளிட்ட திட்டங்களைத் தொடக்கி வைத்த பின்னர் ஜனாதி பதி உரையாற்றினார்.  அப்போது அவர் மேலும் கூறிய தாவது: “கேரளாவின் நல்ல செயல்திறன்  பல மனிதாபிமான குறியீடுகளில் பிரதிபலிக்கிறது என சுட்டிக் காட்டினார். தாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்துவதிலும், குழந்தை இறப்பைக் குறைப்பதிலும் கேரளம் சிறப்பாகச் செயல்படுகிறது. இங்கு  பெண்கள் அதிகம் படித்தவர்களாக வும், அதிகாரம் பெற்றவர்களாகவும் உள்ளனர். பெண்களுக்கு அதிகார மளிக்கும் இந்த மாபெரும் பாரம்பரி யத்தை கடைபிடிக்கும் வகையில், குடும்பஸ்ரீ உலகின் மிகப்பெரிய பெண் கள் சுயஉதவி வலை அமைப்பு களில் ஒன்றாக மாறியுள்ளது. நாட்டிலேயே பல்வேறு துறை களில் கேரள பெண்கள் முதன்மை பெற்று சாதனை படைத்துள்ளனர். நாஞ்சியம்மாவுக்கு தேசிய விருது  கொடுக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது.  இந்த ஆண்டு கேரளாவின் குடியரசு தின அணிவகுப்பு அட்டவணையில் ‘நாரீசக்தி’ (பெண் சக்தி) காட்சிப் படுத்தப்பட்டது கவனத்தை ஈர்த்தது.  பெண்கள் அதிகாரம் பெறுவதற் கான பிரகாசமான எடுத்துக்காட்டு களை கேரளாவில் வெவ்வேறு கால கட்டங்களில் காணலாம். உன்னி யார்ச்சா, நங்கேலி, அம்மு சுவாமி நாதன், தாக்சாயணி வேலாயுதன், அன்னி மஸ்கிரீன், உயர் நீதிமன்ற முதல் பெண் நீதிபதி அன்னா சாண்டி, உச்ச நீதிமன்றத்தின் முதல்  பெண் நீதிபதி, எம்.பாத்திமா பீவி,  96 வயதில் முதியோர் கல்வியில்  முதல் தரப் பெண் கார்த்யாயணி யம்மா போன்றோர் முன்மாதிரியான எடுத்துக்காட்டுகள். வீடு கட்டித்தருதல், சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம் மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாடு போன்ற துறை கள் மூலம் மாநிலத்தில் உள்ள பழங்குடியினரின் நலனுக்கு அதிக முன்னுரிமை அளிப்பதில் மிகவும் மகிழ்ச்சி. யுனெஸ்கோவின் உலக ளாவிய கல்வி ஆய்வுப் பகுதியில் உள்ள மூன்று இந்திய நகரங்களில் நிலம்பூரும் திருச்சூரும் கேரளத்தில் உள்ளன. இது விரிவான-தரமான கல்விக்கான கேரளாவின் தெளி வான உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போ கிறது. அறிவியல் ஆராய்ச்சி மற்றும்  மேம்பாட்டிற்கான அதிநவீன வசதி களைக் கொண்ட நாடு என்று கேரளா  பெருமை கொள்ளலாம்.”  இவ்வாறு குடியரசுத் தலைவர் கூறினார்.

;