states

img

கிறிஸ்தவ நாடார் இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்தது தவறானது.... உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு மேல்முறையீடு....

கொச்சி:
கிறிஸ்தவ நாடாருக்கான இடஒதுக்கீட்டை நிறுத்தி வைத்து, கேரள உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்திருந்த நிலையில், அதற்கு எதிராக கேரள அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள கேரள உயர் நீதிமன்றம், வழக்கை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.மராட்டிய இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கேரள உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி அமர்வுகணக்கில் எடுத்துக்கொள்ள வில்லை என்று மேல்முறை யீட்டில் கேரள அரசுகூறியுள்ளது. “கிறிஸ்தவ நாடார்களுக்கு அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்கி பிப்ரவரி 6-ஆம் தேதி கேரள அரசு பிறப்பித்த உத்தரவுஅரசியலமைப்புக்கு முரணா னது என்ற மனுவின் அடிப்படையில் ஒற்றை நீதிபதி அமர்வு தடை உத்தரவு பிறப்பித்துள் ளது. ஆனால், இது தவறானது.சிஎஸ்ஐ நாடார் பிரிவுக்கு வெளியே உள்ள நாடார் கிறிஸ்தவ பிரிவுகள் மத்தியபட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள னர்” என்றும், நாடார் இடஒதுக்கீட்டில் இருந்து கிறிஸ்தவர் களை விலக்க வேண்டும் என்ற இந்து சேவா மையத்தின் கோரிக்கையை, உயர் நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்து இருப்பதையும் கேரள அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

;