states

img

லட்சத்தீவுகளில் மத்திய அரசு அட்டூழியம்.....

கவரட்டி:
கடலால் சூழப்பட்டபோதும் கடல் ஆக்கிரமிப்புக்கு உட்படாத லட்சத்தீவின் குடிமக்களிடமிருந்து நிலத்தைப் பறிக்க நில உரிமையாளர் விதிகளை மத்திய அரசுமாற்றியுள்ளது. மூன்று வருடங் களுக்குள் தங்கள் உரிமையை புதுப்பிக்காதவர்கள் நிலத்தின் உரிமையை இழக்க நேரிடும் என்றநிபந்தனையை விதித்து உரிமை யாளர்களிடமிருந்து நிலத்தை பறிக்கவும், ரியல் எஸ்டேட் கொள்ளையை ஊக்குவிக்கவும் லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்திற்கான மத்திய அரசின் தலைமை நிர்வாகி பிரபுல் கே. படேல் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

தற்போது, லட்சத்தீவு மக்களுக்கு மட்டுமே அங்குள்ள நிலத்துக்கான உரிமை உண்டு. சட்டத் திருத்தம் மூலம், ஒவ்வொருவரும் நிலத்திற்கான முழு உரிமையை யும் இழப்பார்கள். அதற்கு பதி லாக, நில உரிமை தொடர்பான என்ஓசி (தடையில்லா சான்று)மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறைஎடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும். கூடுதலாக, புதுப்பிக்கப்படும் தேதி வரைஒரு நாளைக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும்.நில உரிமைச் சட்டத்தில் செய்யப்படும் இந்த மாற்றம் தீவுவாசிகளுக்கு பெரும் பின்னடைவாகும்.  லட்சத்தீவில் உள்ள தொழிலாளர்கள் பெரும்பாலும் கடலில் அல்லது அருகிலுள்ள தீவுகளில் இருக்கிறார்கள். உரிமையை சரியான நேரத்தில் புதுப்பிக்க முடியாது. சாதாரண மக்கள் இவ்வளவு பெரிய அபராதத்தை செலுத்தமுடியாது. புதிய சீர்திருத்தங் களுக்காக லட்சத்தீவு மேம்பாட்டுஆணையம் (எல்டிஏ) அமைக்கப் படும் என்று வரைவு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தலைவர், மூன்று பிரதிநிதிகள், ஒரு நகர திட்டமிடல் அதிகாரி மற்றும் இரண்டு உள்ளூர் அரசாங்க பிரதிநிதிகளைக் கொண்டி ருக்கும்.

அதிகாரிகள் வசிக்கும் கன்டோன்மென்ட் பகுதியைத் தவிர வேறு அனைத்துப் பகுதியும் அதிகார சபையின் கட்டுப்பாட்டில் இருக்கும். ரியல் எஸ்டேட் மாபியா சார்பாக தீவுவாசிகளின் நிலங்களை அபகரிக்க நிர்வாகிநடவடிக்கை எடுத்து வருவதாக உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டுகின்றனர். வரைவு அறிவிப்பை திரும்பப் பெறக் கோரி நிர்வாகியிடம் நூற்றுக்கணக்கான மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. வரைவு அறிவிப்பு லட்சத்தீவின் சுற்றுச்சூழல் கட்டமைப்பை மாற்றும் பல கட்டுமான திட்டங்களுக்கும் வழி வகுக்கும்.

;