states

img

கேரளாவில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.    

அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது.      

கேரளாவின் பத்தனம் திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திருச்சூர், ஆகிய 5 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்டை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.   கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை நேற்று 23 ஆக உயர்ந்திருந்த நிலையில் இன்று பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.    

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், நீர் நிலைகளுக்கு அருகில் மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.     அவர்களில் 22 பேர் கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் ஏற்பட்ட இரு நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.

பல்வேறு வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், சேற்றில் புதைந்தும் போயுள்ளன.  இதனால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

;