states

img

அஜிமுல்லா கான் எனும் முஸ்லிம் விடுதலை வீரர் முதன் முதலில் எழுப்பிய கோஷம்

மலப்புரம், மார்ச் 26 - அஜிமுல்லா கான் எனும் முஸ்லிம்  தான் முதன் முதலில் “பாரத் மாதா கி  ஜெய்” என்ற கோஷத்தை முழங்கி யவர்; அந்தக் கோஷத்தை கைவிடு வதற்கு பாஜக தயாரா? என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார். 

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி நடத்தும் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும், ஒன்றிய மோடி அரசின் நாசகர குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அரசியல் அமைப்பு சாசன பாதுகாப்புக் குழு சார்பில் பிரம்மாண்டமான மக்கள் அணிவகுப்புகள் நடைபெற்று வரு கின்றன. அந்த வகையில், மார்ச்  25 அன்று மலப்புரத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் பங்கேற்ற - குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு அணிவகுப்பு நடைபெற்றது.

இப்பேரணியை துவக்கி வைத்து உரையாற்றிய பினராயி விஜயன், ஆர்எஸ்எஸ் - பாஜக காவிக்கும்பல், தேச மக்களிடம் தாங்கள் தான் தேச பக்தர்கள் என்று காட்டிக் கொள்வ தற்காக பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷத்தை அடிக்கடி முழங்குவது உண்டு; ஆனால் உண்மையில் அந்த முழக்கத்தை முதன் முதலில் எழுப்பியவர் ஒரு முஸ்லிம் தேச பக்தர் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.

பினராயி விஜயன் தனது உரையில், “அவரது பெயர் அஜி முல்லா கான். அவர் தான் முதன் முறையாக பாரத் மாதா கி ஜெய்  என்ற முழக்கத்தை எழுப்பியவர்; இந்திய மக்களிடம் அறிமுகப்படுத்தி யவர். இன்றைக்கு ஆர்எஸ்எஸ் - பாஜகவை பின்பற்றுகிற நபர்களுக்கு இந்த உண்மை தெரியாது. ஒரு முஸ்லிமான அஜிமுல்லா கான் எழுப்பிய பாரத் மாதா கி ஜெய் முழக்கத்தை சங் பரிவாரக் கும்பல் கைவிடுவதற்கு தயாரா” என்று கேள்விக்கணை தொடுத்தார். 

“1857ல் முதல் இந்திய சுதந்திரப் போர் நடைபெற்றது. பிரிட்டிஷ் ஆட்சி யாளர்களுக்கு எதிராக அந்த  மகத்தான போருக்கான வியூகங் களை வகுத்தவர்களில் முக்கிய மானவர் அஜிமுல்லா கான் என்று வர லாறு பதிவு செய்துள்ளது. அவர்தான் நமது தாய் திருநாட்டிற்கு பெயர் வைக்கும் விதமாக, தாய் திருநாட்டை உரத்து முழங்கும் விதமாக “மாதா - இ -  வாதான், பாரத் கி ஜெய்” என்ற  முழக்கத்தை முதன்முதலில் எழுப்பி னார்.” 

மலப்புரம் பேரணியில் கூடியிருந்த மக்களிடையே இந்த வரலாற்றை முன் வைத்து, ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பலின் தேசபக்த முகத்திரைக்கு வேட்டு வைத்த பினராயி விஜயன், “குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லா மிய மக்களை இரண்டாம்தர குடி மக்களாக மாற்றும் நோக்கத்துடன் கூடியது; நாட்டிலிருந்தே இஸ்லாமிய சமூகத்தை முற்றாக வெளியேற்ற வேண்டும் என்பதுதான் சங் பரி வாரத்தின் கண்ணோட்டம்; அதை நிறைவேற்றும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதுதான் குடி யுரிமை திருத்தச் சட்டம்” என்றும் சாடினார். 

;