states

img

கேரளம் புதிய வரலாறைப் பதிவு செய்யும் : எம்.வி.கோவிந்தன்

கேரளம் முழுவதும் இடதுசாரி அலை வீசு கிறது, 20 தொகுதிகளிலும் இடதுஜன நாயக முன்னணி (எல்.டி.எப்) வெற்றி பெற்று புதிய வரலாறு படைக்கும். அனைத்து இடங்களிலும் பாரதிய ஜனதா மூன்றாவது இடத்தில் இருக்கும் என்று எம்.வி.கோவிந்தன் தெரிவித்தார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் மேலும் கூறியதாவது: 

பாஜக அரசை வீழ்த்தி, சங்பரிவாரை எதிர்க்கும் மதச்சார்பற்ற அரசைக் கொண்டுவரவும், நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் பலத்தை அதிகரிக்கவும் எல்டிஎப் விரும்புகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது மதப் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கான குறுக்குவழி. மதச்சார்பின்மை மற்றும் அர சமைப்பு சாசனத்தை பாதுகாக்கும் எல்.டி.எப்-க்கு வாக்களிக்க வேண்டும் என மத சமூக தலைவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். 

கடந்த முறை 18 யுடிஎப் நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்தது தவறு என்று கேரளம் உறுதியாக நம்பு கிறது. மதவாதத்தை பரப்பி முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்ட பிரதமர் முயற்சிக்கிறார். ஏனென்றால், முதல் கட்ட தேர்தலுக்குப் பிறகு தோற்றுவிடுவோம் என்று உறுதியாக பாஜகவினர் நம்புகிறார்கள். புகார்கள் மீது ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை. இது தங்களை நியமித்தவர்களுக்கு தேர்தல் ஆணையர்கள் காட்டும் விசுவாசம்.

;