science

img

செவ்வாய் கிரகத்தில் நீர் பகுதியை கண்டுபிடித்தது நாசா

செவ்வாய் கிரகத்தில் மூன்றாவது பெரிய நீர் பரப்பை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தன்னுடைய செவ்வாய் உளவு விண்கலத்தின் (Mars Reconnaissance Orbiter) ரேடார் தகவலின் மூலம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வில் ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது செவ்வாயில் தண்ணீர் உள்ளது என கண்டறிந்துள்ளது. செவ்வாயின் இரண்டு துருவ பகுதிகளிலும் உள்ள பனிப்பாறைகளையடுத்து மூன்றாவது பெரிய நீர் பகுதியாக இது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நீர்ப்பரப்பு சுமார் 1.6 கிலோமீட்டர் தூரம் பரப்பளவு கொண்டுள்ளதாகவும், நீரானது மணற்பரப்பிற்கு இடையிலான பகுதிகளில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வளவு பெரிய பனிக்கட்டி வடிவிலான தண்ணீரை கண்டுபிடிப்போம் என எதிர்பார்க்கவில்லை என்று டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஜியோபிசிக்ஸ் நிறுவன ஆராய்ச்சி உதவியாளராகவும், புதிய ஆய்வின் முதன்மை எழுத்தாளராகவும் இருக்கும் ஸ்டீஃபனோ நெரோசி கூறியுள்ளார்.

மேலும், இந்த உறை நிலையிலுள்ள தண்ணீர் செவ்வாய் கிரகத்தின் பெரும் பகுதிக்கு நிலத்தின் அடியில் சுமார் 5 அடி ஆழத்திற்கு இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

;