science

img

ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!

பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட்டில் இருந்து பிரிந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
நிலவின் தென் துருவத்தில் விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறக்கியதைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆதித்யா எல்-1 திட்டத்தை அறிவித்தனர். இந்த நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் மூலம் இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
1485 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்-1 விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய உள்ளது. பூமியில் இருந்து சூரியன் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலையில், அதில் வெறும் 1% தூரத்திற்கு மட்டுமே ஆதித்யா எல்-1 விண்கலம் பயணம் செய்ய உள்ளது. இந்த விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்து சூரியனின் சுற்று வட்டப்பாதையை அடையும். ஆதித்யா எல்-1, சூரியனின் வெப்ப சூழல், கதிர் வீச்சு மற்றும் சூரியனில் உள்ள துகள்கள் ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்ய உள்ளது. 
 

;